ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனானார் பேட் கம்மின்ஸ்; ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டன் !! 1
FILE PHOTO: Cricket - Ashes 2019 - Fifth Test - England v Australia - Kia Oval, London, Britain - September 12, 2019. Australia's Pat Cummins celebrates the wicket of England's Joe Denly. Action Images via Reuters/Paul Childs

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநடத்தி வந்த டிம் பெய்ன் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால், டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிவிட்டு கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வையும் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் 8ம் தேதி துவங்க உள்ளதால் அதற்கு முன்னதாக புதிய கேப்டனை நியமித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இதற்கான ஆலோசனையிலும் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனானார் பேட் கம்மின்ஸ்; ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டன் !! 2

இந்தநிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அந்த அணியின் சீனியர் ஆல் ரவுண்டரான பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 47-வது கேப்டனாக அவர் பொறுப்பேற்றுள்ளார். 65 வருடங்களுக்குப் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார். ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் துணைக் கேப்டனாக தொடர்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *