ஹர்திக் பாண்டியாவ விட இவர் தான் சரியான ஆளு... கேப்டன் பதவிய இவருக்கு கொடுங்க; டேல் ஸ்டைன் அதிரடி பேச்சு !! 1
ஹர்திக் பாண்டியாவ விட இவர் தான் சரியான ஆளு… கேப்டன் பதவிய இவருக்கு கொடுங்க; டேல் ஸ்டைன் அதிரடி பேச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பும்ராஹ் நியமிக்கப்பட்டால் அது இந்திய அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 2 போட்டியிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஹர்திக் பாண்டியாவ விட இவர் தான் சரியான ஆளு... கேப்டன் பதவிய இவருக்கு கொடுங்க; டேல் ஸ்டைன் அதிரடி பேச்சு !! 2

சமகால கிரிக்கெட்டில் தலைசிறந்த டெஸ்ட் அணியாக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியை, இந்திய அணி மிக இலகுவாக வீழ்த்தியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்திய அணியின் வெற்றியை தொடர்ந்து ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி 23ம் தேதி துவங்க இருக்கும் நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான நடப்பு டெஸ்ட் தொடர் குறித்தும், இந்திய அணி குறித்தும், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்தும் தனது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான டேல் ஸ்டைன், இந்திய அணியை வழிநடத்த பும்ராஹ் சரியான நபர் என தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவ விட இவர் தான் சரியான ஆளு... கேப்டன் பதவிய இவருக்கு கொடுங்க; டேல் ஸ்டைன் அதிரடி பேச்சு !! 3

இது குறித்து டேல் ஸ்டைன் பேசுகையில், “மற்றவர்களை விட பந்துவீச்சாளர்களே கேப்டன் பதவிக்கு சரியானவர்கள் என்பது எனது கருத்து. பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிந்திக்கும் ஆற்றலும், வேகமாக முடிவு எடுக்கும் ஆற்றலும் அதிகம். நான் தென் ஆப்ரிக்கா அணியை வழிநடத்தியது இல்லை அது வேறு விசயம், ஆனால் பந்துவீச்சாளர்கள் கேப்டன் பதவிக்கு சரியானவர்கள் என முழுமையாக நம்புகிறேன். உதராணத்திற்கு ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸை எடுத்து கொள்ளலாம், அவர் ஆஸ்திரேலிய அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்து கொள்ளலாம். பந்துவீச்சாளருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டால் அவரால் அவரது பனிச்சுமையையும் கவனித்தில் கொண்டு செயல்பட முடியும், எந்த நேரத்தில் பந்துவீச வேண்டும், எந்தநேரத்தில் பந்துவீச கூடாது என்பதை அவராகவே முடிவு செய்து கொள்ளலாம். இந்திய அணியை வழிநடத்த பும்ராஹ் மிக சரியானவர், அதே போன்று தென் ஆப்ரிக்கா அணியை வழிநடத்த கேசவ் மஹராஜ் தகுதியானவர் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *