நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்... 2021ம் ஆண்டின் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! 1

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கெனரியா சமகால கிரிக்கெட் தொடரில் தலைசிறந்த டி20 தொடருக்கான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் பாகிஸ்தான் அணியில் நடக்கும் செய்திகளை மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் வட்டாரத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக பேசி வருபவர்.

இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்த டேனிஷ் சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த டி20 தொடருக்கான ஆடும் லெவனில் தேர்வு செய்துள்ளார்.

நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்... 2021ம் ஆண்டின் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! 2

பேட்டிங் ஆர்டர்

துவக்க வீரர்களாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர துவக்க ஜோடியான முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் தனது அணியின் தொடக்க வீரர்களாக தேர்ந்தெடுத்துள்ளார், மேலும் மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மற்றும் 4வது இடத்தில் லியம் லிவிங்ஸ்டனும் தேர்வு செய்துள்ளார் .5வது இடத்தில் அதிரடி வீரர் மிட்செல் மார்சும், 6 மற்றும் 7வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்களான ரவி அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள்

மீண்டும் தனது ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர்களாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சகீன் அஃப்ரிடி, மற்றும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஆகிய மூவரையும் தேர்வு.

நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்... 2021ம் ஆண்டின் சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த முன்னாள் வீரர் !! 3

மேலும் தனது அணியின் சுழற்பந்து வீச்சாளராக டி20 கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பாவை தேர்வு செய்துள்ளார்.

இவர்களை தவிர்த்து இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை 12 ஆவது வீரராக தனிஷ் கணெரிய தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

டேனிஷ் கனரிய தேர்ந்தெடுத்த டி20 தொடருக்கான தலைசிறந்த ஆடும் லெவன்.

முகமது ரிஸ்வான்,பாபர் அசாம், ஜோஸ் பட்லர் லியம் லிவிங்ஸ்டன், மிச்செல் மார்ஸ்,ரவி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, சகீன் அஃப்ரிடி, டிரென்ட் போல்ட், ஆடம் ஜாம்பா, மற்றும் 12வது வீரராக இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *