முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி, ஒரு நிலையில் 5 விக்கெட்டுகள் இழந்து 85 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. ஆனால், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 281 ரன் சேர்த்தது.
மழை காரணமாக 21 ஓவராக மாற்றப்பட்ட நிலையில், குல்தீப் யாதவ் வீசிய பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் டேவிட் வார்னர். இதனால், ஆஸ்திரேலியா அணி 26 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.
இதனால், அடுத்த போட்டி கொல்கத்தாவில் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் கொல்கத்தா வந்து சேர்ந்தார்கள். அங்கு மழை கொட்டுவதால், கொல்கத்தாவில் சுற்றி பார்க்க ஒரு நல்ல இடத்தை கேட்டார் டேவிட் வார்னர்.
இந்த சமயத்தை உபயோகித்த ட்விட்டர் ரசிகர்கள், சவுரவ் கங்குலியின் வீட்டிற்கு செல்ல சொன்னார்கள்.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டி 21ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடக்கவுள்ளது. ஆனால், அங்கு பலத்த மழை பெய்து கொண்டு வருவதால், போட்டி நடப்பது சந்தேகம் தான்.