சண்டக்கோழி வார்னருக்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி., david-warner-fined-75-per-cent-of-match-fee
டி.காக்குடன் மோதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் வார்னரக்கு ஐ.சி.சி., அபராதம் விதித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் போட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது, இதில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கும், ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
போட்டியின் போது மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் வார்னரை டி.காக் எதோ சொல்ல, அதனால் ஆத்திரமடைந்த வார்னர் ரூமிற்கு செல்லும் வரையில் டி.காக்குடன் சண்டை போட்டார். அவரை பல முறை அடிக்கவும் முயன்றார் மற்ற வீரர்கள் வார்னரை தடுத்து நிறுத்தினர், இந்த வீடியோ கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி அது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இது குறித்து விசாரணை செய்த ஐ.சி.சி., வார்னரிடமும் விளக்கம் கேட்டது. வார்னரும் தனது ஒப்புக்கொண்டதால் வர்னரின் போட்டி சம்பளத்தில் இருந்து 75% அபராதமாக ஐ.சி.சி., விதித்துள்ளது. மேலும் அவருக்கு மூன்று டிகிரேட் புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ வார்னருக்கு போட்டி சம்பளத்தில், 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தவிர, மூன்று அபராத புள்ளிகள் வழங்கப்பட்டது,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வார்னர் நாளை துவங்கும் இரண்டாவது டெஸ்டில் விளையாடலாம். ஆனால், அடுத்த இரண்டு ஆண்டில் இன்னும் ஒரு அபராத புள்ளி கூடுதலாக பெற்றால், ஒரு டெஸ்ட் அல்லது 2 ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்.