சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் டுவிட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கலாய்க்கும் விதமாக ட்வீட் செய்துள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் 2021 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட வில்லை என்பதால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டேவிட் வார்னர் 2021 ஐபிஎல் தொடரில் பாதியிலேயே கழட்டி விட்டது, இவரை மைதானத்திற்கு வரவேண்டாம் என்றும் ஹோட்டலிலேயே தங்கிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானதால் ஹைதராபாத் அணி மீது பலரும் தங்களது விமர்சனங்களை வைத்தனர்.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உலக கோப்பை தொடரில் தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் மிக சிறந்த முறையில் விளையாடி அனைவரது பாராட்டையும் பெற்றார். மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தார்.
இந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நெருங்கி வருவதால் அது சம்பந்தமான கருத்துக்களை ரசிகர்கள் உட்பட கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலிய அணியை பாராட்டி ட்விட்டர் பதிவு ஒன்று பதிவிட்டிருந்தார், அந்தப் பதிவில் கமெண்ட் செய்த ரசிகர்கள் ஒருவர் வருகிற ஏலத்தில் ஹைதராபாத் அணிக்கான தேர்வு எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை நக்கலடிக்கும் வகையில் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் சந்தேகம்தான் என்று ரீட்வீட் செய்திருந்தார், இதன்மூலம் வார்னர் ஹைதராபாத் அணி மீது வெறுப்புடன் இருக்கிறார் என்பது உணரமுடிகிறது.
இந்நிலையில் டேவிட் வார்னரின் பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய பழைய பார்மிக்கு திரும்பி ஆசஸ் தொடரில் வெற்றி பெற்றுக் கொடுத்த டேவிட் வார்னர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம், இருந்தபோதும் வருகிறாய் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் நல்ல ஏலத்திற்கு போவீர்கள் என்று நம்புகிறோம் என்றும் அதில் பதிவிட்டு இருந்தது.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.