அப்படி சொன்னால் அது குல்தீப் யாதவிற்கு தான் பிரச்சனை : வார்னர் காட்டம்

குல்தீப் யாதவ் அவ்வாறு கூறியதன் மூலம் அவர், அவர் மீதே அழுத்தத்தை ஏற்ப்படுத்திக் கொள்கிறார் எனக் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர்.

இரண்டாவது ஒருநாள் போட்டி துவங்கும் முன் வார்னர் என்னை எதிர்கொள்ள சிறமப்படுகிறார். அவரை நான் எளிதாக விக்கெட் எடுத்துவிடுவேன். எனக் கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளித்த டேவிட் வார்னர் கூறியதாவது,

குல்தீப்பின் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். அவர் ஹாட்ரிக் எடுத்ததற்கு அவருக்கு என் வாழ்த்துக்கள். நன்றாக விளையாட வேண்டிய கட்டாயம் அவருக்கு தான் உள்ளது பிரச்சனையும் அவருக்கு தான். எனக்கல்ல.!

(Photo Source: Reuters)

2 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டி தான் விளையாடியுள்ளாய். அந்த இளமை இருக்கும் போது அப்படித்தாம் நம்பிக்கையாக இருக்கும். நானும் என்னுடைய இளம் வயதில் அவ்வாறு தான் நம்பிக்கையுடன் இருந்தேன்.

ஆனால், தற்போது அந்த மாரியான ஒரு நம்பிக்கை என்னிடம் இல்லை. அதே போல் தான் எல்லோருக்கும். அவர் நன்றாக தான் விளையாடி வருகிறார். ஆனால், அவ்வாறு பேசுவதன் மூலம் அவர் மேல், அவரே பிரச்சனி வருவது போல் அழுத்தத்தை ஏற்ப்படுத்திக்கொள்கிறார்.

என பெருந்தன்மையாக கூறினார் வார்னர்.

முன்னதாக 2ஆவது போட்டி துவங்கும் முன் , குல்தீப் யாதவ் கூறியதாவது

சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல இன்றைய ஆட்டத்திலும் வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தப்போட்டி குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீரர் குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது பந்து வீச்சை எதிர்கொள்வதில் வார்னர் நெருக்கடியாக இருப்பதாக கருதுகிறேன். அவரை நான் அவுட் செய்து விடுவேன் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அவருக்கு பந்துவீச நான் எப்போதும் ஆர்வத்துடன் தான் இருக்கிறேன். திட்டமிட்டு பந்து வீசி அவரை நான் மீண்டும் அவுட் செய்ய முயற்சிப்பேன்.

வார்னர் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை ஒட்டு மொத்தமாக மாற்றக்கூடியவர். ஆனால் அவரை எந்த நேரத்திலும் என்னால் அவுட் செய்ய இயலும்.

ஆஸ்திரேலிய கேப்டன் சுமித்துக்கு பந்துவீசுவது சவாலானது. டெஸ்ட் போட்டியில் அவரது சிறந்த ஆட்டத்தை நான் பார்த்தேன். ஒரு ரன்னை எப்படி எடுப்பது, லெக்சைடில் எப்படி ஆடுவது என்பதை நன்கு அறிந்தவர்.

யசுவேந்திர சஹாலுடன் இணைந்து பந்து வீசுவது நல்ல அனுபவம். ஒரு அணியில் மணிக்கட்டை சுழற்றி வீசும் இரண்டு சுழற்பந்து வீரர்கள் இருப்பது அபூர்வமான ஒன்றாகும்.

நாங்கள் இருவருமே ஆக்ரோ‌ஷமாக வீசக் கூடியவர்கள். விக்கெட்டுகளை வீழ்த்த எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எங்கள் இருவர் மீதும் அதிகமான பொறுப்பு இருப்பதாக கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

22 வயதான சைனாமேன் பவுலரான குல்தீப் யாதவ் டெஸ்டில் வார்னரை வீழ்த்தியதே முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.

இதேபோல சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியிலும் அவர் வார்னரை அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Editor:

This website uses cookies.