உள்நாட்டு அணிகளுக்கான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசெல்வுட் வீசிய பவுன்சர் டேவிட் வார்னர் கழுத்தில் பட்டதால், உடனே மைதானத்தை விட்டு வெளியேறினார் டேவிட் வார்னர்.
ஹசெல்வுட் வீசிய பவுன்சரை ஹூக் ஷாட் விளையாட நினைத்த டேவிட் வார்னர், அவருடைய கழுத்தில் அடி வாங்கினார். உடனே அந்த பந்து அவரது கால் பக்கம் விழுந்ததால், மைதானத்தை விட்டு உடனே வெளியேறினார் டேவிட் வார்னர்.
வங்கதேச சுற்றுப்பயணத்தை முன்னிட்டு, டேவிட் வார்னர் XI மற்றும் ஸ்டீவன் ஸ்மித் XI அணிகள் என ஆஸ்திரேலிய அணி மூன்று நாள் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.
ஆகஸ்ட் கடைசி மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் வங்கதேசத்துக்கு சென்று டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடவுள்ளது. 2006-க்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக வங்கதேசத்திற்கு சென்று டெஸ்ட் தொடர் விளையாடவுள்ளது.