“வணக்கம் டா மாப்ள சிட்னியிலிருந்து வார்னர்” ! இந்தியா எனது இரண்டாவது வீடு ! ஆளே மாறிய டேவிட் வார்னர் !
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக இருந்தவர் டேவிட் வார்னர். 2009ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் இவர் தற்போது வரை 84 டெஸ்ட் போட்டிகளிலும் 128 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அதனை தாண்டி 81 சர்வதேச டி20 போட்டியிலும் 142 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் என்றாலே ஆக்ரோஷமாக விளையாடுவதும் எதிரணி வீரர்களை எப்போதும் எதிரிகளாகவே நினைத்துக் கொண்டு விளையாடுவது வழக்கம் ஆனால் சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள வீரர்களின் தன்மை அப்படியே மாறிக்கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரிலும் சர்வதேச அளவிலும் இதனை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக டேவிட் வார்னர் கடந்த ஒரு வருடத்தில் முற்றிலுமாக மாறி விட்டார். தனது சமூக வலைத்தளத்தில் இந்திய ரசிகர்களை கவர்வதற்காக டிக்டாக் செய்து கொண்டார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருப்பதால் தெலுங்கு மொழியில் பல பாடல்களுக்கு நடனமாடி கடந்த ஒரு வருடமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அப்படியே சென்று கொண்டிருக்க இந்திய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர்.
ஒரு காலத்தில் இந்திய வீரர்கள் என்றாலே முறைத்துக் கொண்டிருந்த டேவிட் வார்னர் தற்போது ஆளே மாறி, சர்வதேச போட்டி நடைபெறும் போதும் கூட இந்திய வீரர்களுடன் சிரித்து ஜாலியாக பேசி விளையாடி வருகிறார். தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் வணக்கம் டா மாப்ள என்ற பிரபலத்தை போன்று டேவிட் வார்னரின் உருவத்தை வரைந்த புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்திருந்தார். இதனை பார்த்த டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து, இந்தியா என்னுடைய இரண்டாவது தாய்வீடு என்பதுபோல் பதிவு செய்திருக்கிறார்.
