இனி இந்தியாவில் இந்தந்த மைதானங்களில் மட்டுமே டே-நைட் டெஸ்ட் – கங்குலியின் அடுத்த திட்டம்! ரசிகர்கள் கொண்டாட்டம்…
இந்தியாவில் அடுத்தடுத்த தொடர்களில் இந்த மைதானங்களில் மட்டுமே பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடக்கும் என கங்குலி அதிரடியான திட்டத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக இந்தியாவில் பகல்- இரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. இதன் மூலம் இந்தியாவில் பகல்- இரவு டெஸ்ட் நடந்த முதல் மைதானம் என்ற பெருமையை கொல்கத்தா ஈடன்கார்டன் பெற்றது.
இந்த நிலையில் மும்பை, பெங்களூர், குஜராத் ஆகிய 3 இடங்களில் பகல் – இரவு டெஸ்ட் போட்டி அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் நடைபெறும் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து கங்குலி பேசுகையில்,
“கொல்கத்தாவில் நடந்தது போல இனிவரும் காலங்களில் மும்பை, பெங்களூர், குஜராத் ஆகிய இடங்களில் பகல்-இரவு டெஸ்ட் நடத்தப்படும். இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் குறைந்தபட்சம் ஒரு போட்டி பகல்-இரவாக டெஸ்ட் போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 4 நாடுகள் பங்கேற்கும் ‘சூப்பர் சீரிஸ்’ ஒரு நாள் கிரிக்கெட் தொடரை நடத்துவது பரிசீலினையில் உள்ளது. 4-வது நாடு எது என்பது பரிசீலனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என கங்குலி கூறியுள்ளார்.