தங்கத்த தகரம்னு நினச்சு கொல்கத்தா அணி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாங்க ; சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர் !! 1
தங்கத்த தகரம்னு நினச்சு கொல்கத்தா அணி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாங்க ; சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர்..

சுப்மன் கில்லை அணியிலிருந்து நீக்கி கொல்கத்தா அணி மிகப்பெரிய தவறை செய்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில்லை நீக்கி தவறு செய்த கொல்கத்தா அணி..

தங்கத்த தகரம்னு நினச்சு கொல்கத்தா அணி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாங்க ; சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர் !! 2

2018 முதல் 2021 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிரதான வீரராக அறியப்பட்ட இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல போட்டிகளில் ஒற்றை ஆளாக நின்று பல வெற்றகளை பெற்றுக் கொடுத்திருந்தார். ஆனால் இவரை 2022 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தன்னுடைய அணியிலிருந்து நீக்கியது.

இதனால் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்பன் கில்லை 8 கோடி ஏலத்தில் தனது அணியில் தேர்ந்தெடுத்து குஜராத் அணியின் கோர் வீரர்களில் ஒருவராக ஆக்கியது.

தங்கத்த தகரம்னு நினச்சு கொல்கத்தா அணி ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டாங்க ; சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டிய முன்னாள் வீரர் !! 3

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுப்மன் கில் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு மிகப்பெரும் உதவியாக திகழ்ந்து கொல்கத்தா அணி தன்னை நீக்கியது தவறு என்பதை அந்த அணிக்கு புறியவைத்தார்.

மேலும் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான 2023 ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டியில் 63 ரன்கள் எடுத்து குஜராத் அணி வெற்றி பெறுவதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

கில்லை பாராட்டிய சேவாக்..

இப்படி அடுத்தடுத்து கண்டிஸ்டன்டாக விளையாடி வரும் சுப்மன் கில்லை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டு வருகின்றனர்.

சேவாக்

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக்., சுப்மன் கில்லை அணியிலிருந்து நீக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகப்பெரிய தவறு செய்து விட்டது என்று செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் தெரிவித்ததாவது,“கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுப்மன் கொள் கடுமையான வைரம் போன்று திகழ்ந்தார். அவர் அந்த அணியிலேயே பாலிஷ் செய்யப்பட்டிருக்க வேண்டும். விராட் கோலி போன்று சுப்மன் கில், தன்னுடைய 19 வயதிலேயே KKR அணிக்காக விளையாட துவங்கினார்.அவர் கொல்கத்தா அணிக்காக அடுத்த 10-15 ஆண்டுகள் விளையாடியிருக்க வேண்டும். நானாக இருந்தால் அவரை கொல்கத்தா அணியில் இருந்து ஒருபோதும் விட்டிருக்க மாட்டேன், அவரை நீக்கி கொல்கத்தா அணி மிகப்பெரிய தவறு செய்து விட்டது, அதற்கான பலனையும் கொல்கத்தா அணி அனுபவித்து வருகிறது” என்று கீழ் குறித்தும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்தும் சேவாக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *