ஐபிஎல் தொடரில் 46வது போட்டியில் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் மூன்றாம் இடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மோதுகின்றன.
டெல்லி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாக இருக்கும். அதே போல் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கும். இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியைத் தழுவினால் லீக் சுற்றில் இருந்து வெளியேறும்.
இரு அணிகளும் இப்போட்டி வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பதால், பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

சாத்தியமான வீரர்கள்
டெல்லி கேப்பிடல்ஸ் – ஷிகார் தவான், ப்ரிதிவி ஷா, காலின் இங்கிராம், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கிறிஸ் மோரிஸ், சந்தீப் லேமிச்சேன், ஆக்ஸார் படேல், கிகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பார்திவ் படேல், விராத் கோஹ்லி, ஏபி டி வில்லியர்ஸ், ஹெட்மாயர், சிவம் துபெ, மார்கஸ் ஸ்டாயினிஸ், வாஷிங்டன் சுந்தர், யூசுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி
சாத்தியமாக சிறந்த வீரர்கள்
ஷ்ரேயாஸ் ஐயர், ரபாடா – டெல்லி | விராத் கோஹ்லி, டிம் சவுத்தி – பெங்களூரு

ஒளிபரப்பு விவரங்கள்
டிவி – ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தேர்ந்தெடு HD
லைவ் ஸ்ட்ரீமிங் – ஹாட் ஸ்டார்
போட்டி நேரம் – 16:00 IST
இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெறும் என கணிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் போட்டியில் டாஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.