தோனி படையையும் வீழ்த்துவோம்; எச்சரிக்கும் ஸ்ரேயஸ் ஐயர் !! 1

தோனி படையையும் வீழ்த்துவோம்; எச்சரிக்கும் ஸ்ரேயஸ் ஐயர்

எலிமினேட்டர் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி அணி வீழ்த்தும் என அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான வெளியேற்று சுற்றுப்போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி படையையும் வீழ்த்துவோம்; எச்சரிக்கும் ஸ்ரேயஸ் ஐயர் !! 2

இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நாளை 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியும் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், நாளைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. எனவே நாளை போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தோனி படையையும் வீழ்த்துவோம்; எச்சரிக்கும் ஸ்ரேயஸ் ஐயர் !! 3

இதற்கிடையே பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “ஹைதராபாத் அணிக்கு எதிராக வென்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை கூற வார்த்தையில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நான் தகுதிச்சுற்றுகளை அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்தேன். அணியில் இருக்கும் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியை காண முடிகிறது. ஹைதராபாத்தை வென்றதுபோல சென்னைக்கு எதிராகவும் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அடுத்த போட்டியிலும் முன்னேறிச்செல்வோம். ஆனால் சென்னை அணி சிறப்பாக விளையாடி வந்துள்ளனர்” என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *