ஐபிஎல் தொடரில் பரபரப்பான லீக் போட்டிகள் முடிவடைந்த பிறகு பிளே ஆப் சுற்று துவங்கியுள்ளது. இதில் முதல் குவாலிபயர் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இரு அணிகளும் மோதின. அதில் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் அபாரமாக வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்துள்ளது மும்பை அணி.
தற்பொழுது புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த டெல்லி மற்றும் ஹைதராபாத் இரு அணிகளும் மோதும் நாக் அவுட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் தோல்வி பெரும் அணி நேரடியாக வெளியே அனுப்பப்படும். அதேபோல், வெற்றி பெறும் அணி முதல் குவாலிபயர் போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணியுடன் மோதும். அதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் பைனலில் மும்பை அணியுடன் மோதும்.
ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. யூசுப் பதான் வெளியில் அமர்த்தப்பட்டு, அவருக்கு பதிலாக தீபக் ஹூடா உள்ளே எடுத்து வரப்பட்டுள்ளார். டெல்லி அணியும் ஒரே ஒரு மாற்றத்துடன் களமிறங்குகிறது. அதாவது காலின் இங்ரம் வெளியில் அமர்த்தப்பட்டு, அவருக்கு பதிலாக காலின் முன்ரோ இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
இன்றைய போட்டியில் ஆடும் இரு அணி வீரர்களின் விவரம்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி
ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், கொலின் முர்ரோ, ஷ்ரியாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (கீப்பர்), ஷெர்பேன் ரூதர்போர்ட், அக்ஸார் படேல், கீமோ பால், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ட்ரெண்ட் போல்ட்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
விரிதிமான் சஹா, மார்டின் குப்டில், மனிஷ் பாண்டே, கேன் வில்லியம்சன், விஜய் ஷங்கர், முகமது நபி, தீபக் ஹூடா, ரஷீத் கான், புவனேஸ்வர் குமார், கே. கலீல் அகமது, பசில் தம்பி
.