48 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் செய்ய முடியாத சாதனை... ஓய்வு பெற போகும் நேரத்தில் பல சாதனைகள் படைக்கும் குவிண்டன் டி காக் !! 1
48 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் செய்ய முடியாத சாதனை… ஓய்வு பெற போகும் நேரத்தில் பல சாதனைகள் படைக்கும் குவிண்டன் டி காக்

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங்கில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு வரும் தென் ஆப்ரிக்கா அணி குவிண்டன் டி காக், இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 23வது போட்டியில் வங்கதேச அணியும், தென் ஆப்ரிக்கா அணியும் மோதி வருகின்றன.

48 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் செய்ய முடியாத சாதனை... ஓய்வு பெற போகும் நேரத்தில் பல சாதனைகள் படைக்கும் குவிண்டன் டி காக் !! 2

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த தென் ஆப்ரிக்கா அணிக்கு ஹென்ரிக்ஸ் (12), வாண்டர் டூசன் (1) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், இந்த தொடரின் துவக்கத்தில் இருந்து பேட்டிங்கில் மிரட்டி வரும் தென் ஆப்ரிக்கா அணியின் துவக்க வீரரும், அந்த அணியின் விக்கெட் கீப்பருமான குவிண்டன் டி காக், கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியிலும் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு, மொத்தம் 140 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார்.

48 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் செய்ய முடியாத சாதனை... ஓய்வு பெற போகும் நேரத்தில் பல சாதனைகள் படைக்கும் குவிண்டன் டி காக் !! 3

அதே போன்று மார்கரம் (60), ஹென்ரிச் கிளாசன் (90) மற்றும் டேவிட் மில்லர் (34) ஆகியோரும் வங்கதேச அணியின் பந்துவீச்சை சிதறடித்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி 382 ரன்கள் குவித்தது.

இந்தநிலையில், கடந்த போட்டிகளை போன்று வங்கதேச அணியுடனான போட்டியிலும் பேட்டிங்கில் மாஸ் காட்டிய குவிண்டன் டி காக், இதன் மூலம் பல்வேறு சாதனைகளும் படைத்துள்ளார்.

48 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் செய்ய முடியாத சாதனை... ஓய்வு பெற போகும் நேரத்தில் பல சாதனைகள் படைக்கும் குவிண்டன் டி காக் !! 4

48 வருட உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் குவிண்டன் டி காக் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்கா அணிக்காக ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கேரி கிரிஸ்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை டி காக் பிடித்துள்ளார். 

ஒரே உலகக்கோப்பை தொடரில் 3 சதங்கள் அடித்த  முதல் தென் ஆப்ரிக்கா வீரர் என்ற பெருமையையும் டி காக் பெற்றுள்ளார். 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக முறை 150+ ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில், ஆடம் கில்கிறிஸ்டை (2 முறை) பின்னுக்கு தள்ளி டி காக் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையிலும் குவிண்டன் டி காக் (15) முதல் இடத்தை பிடித்துள்ளார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *