ஒரு நாட்டி அணி மோசமான காலகட்டத்தில் பயணிக்கும் போது அந்நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் ஜாம்பவான்கள் அணிக்கும் வீரர்களுக்கும் ஆருதளாக இருக்க வேண்டும். எல்லோரும் அப்படி தான் செய்து வருகிறார்கள்.
ஆனால், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் டீன் ஜோன்ஸ் மற்றும் ப்ராட் ஹாக் ஆகியோர் அவ்வாறு செய்ய மாட்டார்கள் போல. ஆம், இந்தியா ஆஸ்திரேலியா இடையிளான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இந்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஏற்க்கனவே முதல் இரண்டு போட்டிகளையுன் வென்ராதால் இந்த பொட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக சற்று ஆர்வத்துடன் அனைவராலும் பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் தோலியுற்றது. மீதம் இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கும் நிலையில் இந்திய அணி தொடரையும் வென்றது.
இதனால், விரக்தியின் உட்சத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களான டீன் ஜோன்ஸ் மற்றும் ப்ராட் ஹாக் ஆகியோர் டி,வி பெட்டிகள், லேப்டாப்புகள், கணிப்பொறிகள் என அனைத்தையும் போட்டு உடைத்து விளாசியுள்ளனர்.
ஆனால், அவர்கள் உடைத்தது அவர்கள் வீட்டு உபகரணங்கள் அல்ல, அவர்கள் உடைத்தது இந்தியாவின் பொருட்கள் ஆகும். ஆம், இந்தூரில் இதற்கென ஒரு நிருவனம் இருக்கிறது.
அந்த நிருவனத்தின் பெயர், ‘படாஸ்’ என்பதாகும். அங்கு யார் வேண்டுமானால் சென்று அங்க இருக்கும் லேப்டாப், கணிப்பொறி, வாசிங் மசின், டி.வி பெட்டிகள் என எதை வேண்டுமானால் உடைத்துக் கொள்ளலாம்.
இந்த நிருவனம் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் துவங்கப்பட்டது. இங்கு என சிறப்பம்சம் என்றால் அங்குள்ள பொருட்களை உடைத்து நமது கோபத்தை தணித்துக்கொள்ளலாம் என்பதே இதன் நோக்கமாகும்.
அங்கு இவ்வளவு மணி நேரத்திற்கு இவ்வளவு பணம் என செலுத்தி அங்கு வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் உங்கள் கோபம் தீரும் வரை உடைத்துக்கொள்ளாலாம்.
இதைத் தான் ஆஸ்திரேலிய அணி தோற்றதும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் நேராக ‘படாஸ்’ சென்று அவர்களுக்கு தேவையானதை உடைத்து தங்களது கோபத்தை தணித்துள்ளனர்.
இதனைப் பற்றி அந்த காபி மேளாலர் அதுல் மாலிக்ரம் கூறியதவது,
அந்த போட்டி முடிந்ததும் டீன் ஜோன்ஸ் மற்றும் ப்ராட் ஹாக் ஆகியோர் எங்களது காபி சாப்பிற்க்கு வந்தனர். இங்கு வைக்கப்பட்டிருன்ந்த பொருட்களை உடைத்தனர்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் இங்கு செலவிட்டனர். அவர்கல் எங்களது விருந்தாளிகள் ஆகையால் அவர்களிடம் நாங்கள் எந்த கட்டணமுன் பெறவில்லை.
எனக் கூறினார்.