ஐசிசி வெளியிட்ட பெண்கள் அணியில் இந்திய வீரர்களுக்கு இடம் ! 1

ஐசிசி வெளியிட்ட பெண்கள் அணியில் இந்திய வீரர்களுக்கு இடம் ! எல்லிஸ் பெர்ரிஸின் மூன்று சாதனைகள் !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று கடந்த 10 (2011 – 2020) வருடங்களுக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் சர்வதேச சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளை அறிவித்துள்ளது.

ஐசிசி அறிவித்த ஒருநாள் மற்றும் டி20 கனவு அணியில் இந்திய அணியின் கேப்டனாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து  டெஸ்ட் போட்டியின் கேப்டனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு ஐசிசி தேர்வு செய்யப்பட்ட மூன்று வடிவிலான அணிகளில் இந்திய வீரர்கள் இருவர் கேப்டனாக செயல்படுவது  சிறப்புமிக்கது. மேலும்,  ரோகித் சர்மா,  ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி வெளியிட்ட பெண்கள் அணியில் இந்திய வீரர்களுக்கு இடம் ! 2

இதனிடையில்,  பெண்கள் கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20  சிறந்த அணியை  ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்திய பெண் கிரிக்கெட் வீரர்களும்  இடம்பெற்றுள்ளனர்.  ஐசிசி அறிவித்த அணியின்  கேப்டனாக இஸ்ரேலிய வீரர் மெக் லானிங்  தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளுக்கான மகளிர் அணியில்  இந்தியாவின் மிதாலி ராஜ், ஜூலான் கோஸ்வாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

ஐசிசி வெளியிட்ட பெண்கள் அணியில் இந்திய வீரர்களுக்கு இடம் ! 3

இதேபோல்,   கடந்த 10 ஆண்டுகளில் டி20  போட்டிகளுக்கான மகளிர் அணியில்  இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பூனம் யாதவ் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி வெளியிட்ட பெண்கள் அணியில் இந்திய வீரர்களுக்கு இடம் ! 4

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின்  ஆல்ரவுண்டர் எல்லிஸ் அலெக்ஸாண்ட்ரா பெர்ரி ஐசிசி  சிறந்த அணியின் பெண்கள் கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 என இரண்டிலும் இடம் பெற்றுள்ளார். இவரை ஐசிசியின் மூன்று விதமான விருதுகளை பெற்றுள்ளார்.எல்லிஸ் பெர்ரி ரேச்சல் ஹேஹோ பிளின்ட் விருதை  கடந்த 10 வருடத்தில் சிறந்த பெண் என்ற விருதை வென்றுள்ளார். மேலும், ஐ.சி.சி மகளிர் டி20 மற்றும் ஒருநாள் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் வென்றுள்ளார்.

ஐசிசி வெளியிட்ட பெண்கள் அணியில் இந்திய வீரர்களுக்கு இடம் ! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *