இரண்டு மிக முக்கியமான வீரர்கள் விலகல்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு !! 1

காயம் காரணமாக எதிர்வரும் இலங்கை அணியுடனான டி.20 தொடரில் இருந்து தீபக் சாஹர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விலக உள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதில் முதலில் நடைபெறும் டி.20 தொடரின் முதல் போட்டி 24ம் தேதி நடைபெற உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து தீபக் சாஹர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது.

இரண்டு மிக முக்கியமான வீரர்கள் விலகல்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு !! 2

சமீபத்தில் நடந்து முடிந்த விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ், விண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி.20 போட்டியின் போது காயமடைந்தார். இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டி.20 தொடரில் இருந்து சூர்யகுமார் யாதவ் முழுமையாக விலகியுள்ளதாக பிசிசிஐ., அறிவித்துள்ளது. அதே போல் முழுங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் தீபக் சாஹரும் டி.20 தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரண்டு மிக முக்கியமான வீரர்கள் விலகல்; இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு !! 3

விராட் கோலி, ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் சாஹர் விலகியுள்ளதும் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. விலகிய வீரர்களுக்கு பதிலான மாற்று வீரர்கள் யார் என்ற அறிவிப்பை பிசிசிஐ., இன்னும் வெளியிடவில்லை. கொரோனா விதிமுறைகளை அடிப்படையாக கொண்டு மாற்று வீரர்களை பிசிசிஐ., அறிவிக்கும் என தெரிகிறது.

டி.20 தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ராஹ் (துணை கேப்டன்), ஆவேஸ் கான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *