தோனியின் அணியில் இடம்பிடிக்க இந்த திறமைகள் எல்லாம் வேண்டும் தீபக் ஓபன் டாக்!! 1

தோனியின் அணியில் இடம்பிடிக்க இந்த திறமைகள் எல்லாம் வேண்டும் தீபக் ஓபன் டாக்!!

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மகேந்திர சிங் தோனி. 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இப்படி ஒரு கேப்டனை கிரிக்கெட் உலகம் பார்த்திருக்காது. அந்த அளவிற்கு கிரிக்கெட் நுணுக்கம், கிரிக்கெட் மூளை கொண்ட வீரர் தோனி. இதனை கடந்த பல வருடங்களாக பார்த்திருக்கிறோம். பல சாதனை படைத்திருக்கிறார் தோனி.

Auction is coming - MS Dhoni's hilarious response to Deepak Chahar's death  bowling plans - myKhel

ஒரு அணியில் கேப்டன் ஆகி விட்டால், அந்த அணியில் நடக்கும் அனைத்து வேலைகளும் இவர் கண்ணிர்க்கு வந்து செல்ல வேண்டும். எந்த வீரரை எடுப்பது, எந்த வீரரை வேண்டாம் என்று சொல்வது, யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்று ஆராய்வது என அனைத்தும் தோனியின் கண்ணில் பட்டு விட்டுத்தான் செல்லும். இறுதியாக அவர் யாரை அடைகிறாரோ அதுதான் அவர் அணி.தோனியின் அணியில் இடம்பிடிக்க இந்த திறமைகள் எல்லாம் வேண்டும் தீபக் ஓபன் டாக்!! 2

அப்படித்தான் இத்தனை வருடமாக இந்திய அணியிலிருந்து, அவர் தலைமை வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரை இருந்து வருகிறது. இந்நிலையில் 27 வயதான வேக பந்துவீச்சாளர் தீபக் சாஹர் தோனியின் அணியில் 2011ம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். தற்போது அவர் அணியில் விளையாட என்னென்ன திறமைகள் எல்லாம் வேண்டும் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

அவர் கூறுகையில் “தோனி தலைமை வகிக்கும் அணியில் விளையாட அனைத்து விதமான திறமைகளும் இருக்க வேண்டும். பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என அனைத்தும் சரி சமமாக இருந்தால்தான், அவர்கள் அணியில் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒரு நல்ல பந்து வீச்சாளர், ஒரு நாள் சரியாக வீசவில்லை என்றால் அந்த நாளில் 20 ரன்கள் அடிக்கலாம். அல்லது நல்ல கேட்ச் பிடித்து அணியின் ஆட்டத்தை மாற்றலாம்.

அதேபோல்தான் பேட்ஸ்மேன் நன்றாக பேட்டிங் பிடிக்கவில்லை என்றால், நன்றாக பீல்டிங் செய்து அணிக்கு உதவலாம். இதுதான் தோனிக்கு தேவை. இவை இருந்தால்தான் தோனியின் அணியில் நீங்கள் ஆட முடியும்” என்று தெரிவித்திருக்கிறார் தீபக் சஹர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *