இந்திய அணிக்கு எதிராக நான் செய்த இந்த சம்பவம் தரமானது; பென் ஸ்டோக்ஸ் நெகிழ்ச்சி !! 1

இங்கிலாந்து அணி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நடந்த அந்த ஒரு விஷயம் தான் மிகவும் வேடிக்கையானது என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாடியது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என வெறித்தனமாக தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என திரில்லிங் வெற்றி பெற்றது. இதனால் உலக சாம்பியன் என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை வெறுங்கையோடு அனுப்பியது.

இந்திய அணிக்கு எதிராக நான் செய்த இந்த சம்பவம் தரமானது; பென் ஸ்டோக்ஸ் நெகிழ்ச்சி !! 2

இந்நிலையில் இங்கிலாந்துக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பவுலர்களின் சொதப்பல் பந்து வீச்சால் தோல்வியைத் தழுவியது.இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் கே.பாண்டிய மற்றும் குல்தீப் யாதவ் ரன்களை வாரி வழங்கினார்கள். குல்தீப் யாதவ் அவர்கள் வீசி 52 ரன்களை அள்ளிக் கொடுத்த அதே போன்று கே பாண்டியா 6 ஓவர்கள் வீசி 72 ரன்களை கொடுத்தார்.இதனால் இங்கிலாந்து அணி 43.5 ஓவர்களிலேயே தனது இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இதில் ஜானி பேர்ஸ்டோ 112 பந்துகளில் 129 ரன்கள் அடித்து சிறந்த துவக்கத்தை இங்கிலாந்து அணிக்கு கொடுத்தார்.குறிப்பாக இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 51 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து அசத்தினார்.அதில் தனது அரைசதத்தை 40 பந்துகளில் பதிவு செய்தார் அதன் அதிரடியாக விளையாட தொடங்கிய பென் ஸ்டோக்ஸ், அடுத்த 11 பந்துகளில் 49 ரன்கள் அடித்து இந்திய அணியை சிதறடித்தார். அதில் 10 சிக்ஸர்களும்,4 பவுண்டரிகலும் அடங்கும், மேலும் அந்த போட்டியில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 190.38.இந்த அபாரமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி 39 பந்துகள் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு எதிராக நான் செய்த இந்த சம்பவம் தரமானது; பென் ஸ்டோக்ஸ் நெகிழ்ச்சி !! 3

இந்நிலையில் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, இங்கிலாந்து அணிக்காக நான் விளையாடிய போட்டியில் இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் அடித்தது தான் மிகவும் வேடிக்கையான விஷயமாகும் என்று தெரிவித்திருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *