சிஎஸ்கே அணியை தவிர மேலும் ஒரு முக்கிய அணிக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்! ரசிகர்கள் கவலை! 1

சிஎஸ்கே அணியை தவிர மேலும் ஒரு முக்கிய அணிக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்! ரசிகர்கள் கவலை!

ஐபிஎல் தொடரின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. நிலையில் திடீரென டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை பிசியோதெரபி ஆலோசனை பெற்றுக் கொண்டிருக்கும் நபருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.சிஎஸ்கே அணியை தவிர மேலும் ஒரு முக்கிய அணிக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்! ரசிகர்கள் கவலை! 2

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை, மும்பை, டெல்லி போன்ற 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருக்கின்றன. முன்னதாக இதற்காக உயிர் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அனைத்து அணிகளும் துபாய்க்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியாக ஹோட்டல் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும், ஊழியர், பயிற்சியாளர், வேலை ஆட்கள் என அனைவருக்கும் தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்படி கடுமையான கெடுபிடிகளுடன் இந்த உயிர் பாதுகாப்பு வளையம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் ருத்ராஜ் ஆகிய இருவரும் பாதிக்கப்பட்டார்கள்.

சிஎஸ்கே அணியை தவிர மேலும் ஒரு முக்கிய அணிக்குள் நுழைந்த கொரோனா வைரஸ்! ரசிகர்கள் கவலை! 3

இதே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி ஐபிஎல் தொடரில் ஒரு பிரச்சனையை உருவாக்கியது. இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் இதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் அமைதியாக பிரச்சனையிலிருந்து கடந்து சென்றது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் விடுபட்டு விட்டார்.

அதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்துதான் மற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் பயிற்சிக்கு சென்றார்கள். இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபி ஒருவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். முதல் இரண்டு சோதனையின் போது அவருக்கு நினைவுக்கு வந்தது அதாவது சோதனையின்போது பாசிட்டிவாக வந்திருக்கிறது. இதன் காரணமாக அவருடன் தொடர்பில் இருந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்ட இருக்கிறார்கள்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *