ஆர்சிபி-க்கு பதிலடி கொடுத்த டெல்லி... சால்ட் மரண அடி... டெல்லி அணி அபார வெற்றி! 1

ஆர்சிபி அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை 16.4 ஓவர்களில் கடந்து அபார வெற்றி பெற்றுள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆர்சிபி-க்கு பதிலடி கொடுத்த டெல்லி... சால்ட் மரண அடி... டெல்லி அணி அபார வெற்றி! 2

ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் பாப் டு பிளசிஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 82 ரன்கள் சேர்த்தது. பாப் டு பிளசிஸ் 45 ரன்கள் அடித்து அவுட்டானார். மேக்ஸ்வெல் வந்தவுடன் அவுட்டானார்.

பின்னர் வந்த லோம்ரோர் களத்தில் இருந்த விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த ஜோடி 55 ரன்கள் சேர்ந்தது. விராட் கோலி 55 ரன்களுக்கு அவுட் ஆனார்.

ஆர்சிபி-க்கு பதிலடி கொடுத்த டெல்லி... சால்ட் மரண அடி... டெல்லி அணி அபார வெற்றி! 3

மஹிபால் லோம்ரோர் 29 பந்துகளில் 54 ரன்கள் அடித்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்திருந்தது ஆர்சிபி அணி.

182 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு வார்னர் மற்றும் பில் சால்ட் ஓபனிங் இறங்கி முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் சேர்த்தனர். டேவிட் வார்னர் 22 ரன்களுக்கு அவுட் ஆனார்.

இதற்கு முன்னர் பில் சால்ட் கொடுத்த கேட்சை கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் தவறவிட்டார். அதன்பிறகு பில் சால்ட் நிறுத்தாமல் அதிரடியாக விளையாடி ஆர்சிபி அணிக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு உள்ளே வந்த மிட்ச்சல் மார்ஷ், சால்ட் உடன் ஜோடி சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மார்ஷ் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். ஆர்சிபி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துகொண்டிருந்த பில் சால்ட் 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் எட்டு பவுண்டரிகள் உட்பட 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

ஆர்சிபி-க்கு பதிலடி கொடுத்த டெல்லி... சால்ட் மரண அடி... டெல்லி அணி அபார வெற்றி! 4

அடுத்து உள்ளே வந்த ரிலீ ரொஷோவ் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி உட்பட 35 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

181 ரன்கள் இலக்கை 16.4 ஓவர்களில் சேஸ் செய்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *