மும்பை அணியில் ரோகித் சர்மாவை டார்கெட் செய்து தூக்குவோம்! ஷிகர் தவான் ஓபன் டாக்!
இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நேரெதிரே வியாழக்கிழமை முதல் குவாலிபயர் ஐபிஎல் போட்டியில் விளையாட போகிறார்கள். கோப்பையை தக்க வைப்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியும் இந்த முறையாவது இறுதிப் போட்டியில் களமிறங்க வேண்டும் என்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வியாழக்கிழமை மோத போகின்றன

இதுகுறித்து ஷிகர் தவான் ரோகித் சர்மாவை விக்கெட் வீழ்த்தி விடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார். ரோகித் சர்மா ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தான் களமிறங்கினார் .அதற்கு முன்னதாக மூன்று போட்டிகளில் காயம் காரணமாக வெளியே இருந்தார் தற்போது வரை இந்த வருட ஐபிஎல் தொடரில் 264 ரன்கள் எடுத்துள்ளார் அதன் ஸ்ட்ரைக் ரேட் 126 தான்
அதே நேரத்தில் ஷிகர் தவான் இந்த வருட ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் அடித்து உச்சகட்டத்தில் இருக்கிறார் இந்நிலையில் தான் இந்த இரண்டு அணிகளும் வியாழக்கிழமை முதல் குவாலிபயர் போட்டியில் விளையாட இருக்கின்றன. இந்த போட்டி குறித்து பேசியுள்ளார் ஷிகர் தவான்…

கண்டிப்பாக ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த வீரர் கடைசியாக அவர் பல போட்டிகளில் விளையாடவில்லை அவர் நன்றாக விளையாடுவாரா என்றும் நமக்கு தற்போது தெரியாது காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஆனால் ஒரு எதிரணி வீரராக அவரது விக்கெட்டை வீழ்த்த நான் முயற்சி செய்வேன் எங்களது அணியும் அதைத்தான் செய்யும் ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு வருகிறார் என்றால் அவருக்கு சற்று அழுத்தம் இருக்கும் அதனை நாங்கள் உபயோகித்து அவரது விக்கெட்டை வீழ்த்துவோம் என்று தெரிவித்திருக்கிறார் ஷிகர் தவான்