Marlon Samuels, Marlon Samuels IPL, Marlon Samuels IPL 10, Marlon Samuels Delhi, Quinton De Kock, IPL 2017, Cricket

சமீபத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ், தற்போது டெல்லி டேர்டெவில்ஸுக்காக விளையாட போகிறார்.

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. டெல்லி அணியின் தென்னாபிரிக்கா விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் க்விண்டன் டி காக் நடுவிரல் காயத்தினால் இன்னும் ஒரு போட்டி கூட விளையாடவில்லை. இதனால் இவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்குவுள்ளார்.

மார்லன் சாமுவேல்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நடந்த ஐபில் ஏலத்தில் சாமுவேல்ஸுக்கான அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக இருந்தது. அந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்க வில்லை.

இதனால், டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த ஐபில்-இல் 6 போட்டிகள் விளையாடி 2 வெற்றியை கண்டு புள்ளி பட்டியலில் 7வது இடத்தில இருக்கிறது.

டெல்லி அணி அடுத்த போட்டியில் ஏப்ரல் 28 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் மோதுகிறது. இதனால் ட்விட்டரில் சாமுயேல்ஸுக்கு வரவேற்பு அளித்தது டெல்லி அணி.

சாமுவேல்ஸ் அணியில் இணைந்ததால் டெல்லி அணியின் பலம் அதிகரிக்கும். அவர் விளையாடிய 10 ஐபில் போட்டிகளில் 132 ரன்னும் 9 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

அவர் இதுவரை 149 டி20 போட்டிகளில் 3757 ரன் அடித்துள்ளார். அதில் இரண்டு சதம் மற்றும் 25 அரைசதம் அடங்கும்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *