பும்ரா இல்லைன்னா வேற பிளேயரே இல்லையா? அவர் இல்லாம ரோகித் சர்மா கேப்டன்ஷி பண்ண பயப்படுகிறார்- கடுமையாக சாடிய அஜித் அகர்கர்!

பும்ரா இல்லாமல் ரோகித் சர்மா-வால் சரியாக கேப்டன் பொறுப்பில் செயல்பட முடியவில்லை என்று சாடி இருக்கிறார் அஜித் அகர்கர்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் தவிக்கிறார். ஆசியகோப்பை தொடர், டி20 உலக கோப்பை தொடர் என இரண்டிலும் அவரால் விளையாட முடியவில்லை.

பும்ரா இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணி பல்வேறு வீரர்களை பயன்படுத்தி வருகிறது. உம்ரான் மாலிக், குல்தீப் சென், தீபக் சகர், ஆவேஷ் கான் என பலரும் அந்த இடத்திற்கு வந்து சென்று விட்டனர். தற்போது வரை பும்ரா இல்லாமல் இந்திய அணி பின்னடைவில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் பும்ராவின் இடத்தை நிரப்புவதற்கு பல்வேறு வீரர்களை பயன்படுத்தி, என்ன செய்வது என்று புரியாமல் குழப்பதில் இருக்கிறார் ரோகித் சர்மா என்று கடுமையாக சாடியதோடு, வேறு வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை எனவும் பேசியிருக்கிறார் அஜித் அகர்கர்.

“பும்ரா இல்லாதது இந்திய அணியில் மிகப்பெரிய வெற்றிடமாக தெரிகிறது. அந்த இடத்தில் யாரை பயன்படுத்த வேண்டும் என்று அணி நிர்வாகத்திற்கும் கேப்டனுக்கும் தெரியவில்லை.

பும்ராவின் இடத்திற்கு வரும் வீரர்களை ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாட வைத்துவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பும்ரா இடத்திற்கு வரும் வீரர் எப்படி செயல்படுவார் என்று பார்க்காமல், அவர் ஏன் பும்ராவை போல இல்லை? என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததால் தான் இத்தகைய தவறுகள் நேர்ந்திருக்கிறது.

அந்த குறிப்பிட்ட வீரருக்கு என்ன பலம் மற்றும் பலவீனம் என்பதை தெரிந்து கொள்ளாமல் வெறுமனே பும்ரா மாதிரி இல்லை என்ற மெத்தனப்போக்கு மட்டுமே தெரிந்தது. இது நிச்சயம் கவனிக்க கூடிய தவறு. முன்னணி வீரர் இல்லை என்றால், அந்த இடத்திற்கு வரும் வீரருக்கு என்ன பலம் மற்றும் பலவீனம் இருக்கின்றது என்பதை ஒரு கேப்டனாக இருந்து ரோகித் சர்மா கவனத்திருக்க வேண்டும். ஆனால் மாற்று வீரரை உள்ளே எடுத்து வந்துவிட்டு சரியாக பயன்படுத்தாமல், மீண்டும் வேறொரு வீரர் கிடைப்பாரா? என தேடுகிறார். தொடர்ச்சியாக இதுதான் நடக்கிறது.” என அஜித் அகர்கர் சாடினார்

Mohamed:

This website uses cookies.