இந்திய அணியில் இருந்து ஹர்பஜன் சிங்கை ஓரம் கட்டியது எப்படி? கடைசியாக வாய்திறந்து உண்மையை கூறிய ரவிச்சந்திரன் அஸ்வின்! 1

இந்திய அணியில் இருந்து ஹர்பஜன் சிங்கை ஓரம் கட்டியது? எப்படி கடைசியாக வாய்திறந்து உண்மையை கூறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

1997 ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தார் ஹர்பஜன் சிங். கிட்டத்தட்ட 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இந்திய அணியில் ஆழமாக தனது இடத்தை பதித்திருந்தார்.இந்திய அணியில் இருந்து ஹர்பஜன் சிங்கை ஓரம் கட்டியது எப்படி? கடைசியாக வாய்திறந்து உண்மையை கூறிய ரவிச்சந்திரன் அஸ்வின்! 2

ஆனால் 2010ம் ஆண்டு ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக அறிமுகமானார். அந்த தருணத்தில் இருந்து ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை சரிய துவங்கியது. தேர்வு குழுவினரும் ஹர்பஜன்சிங் கைவிட்டுவிட்டு ரவிச்சந்திரன் அஸ்வினையே தேர்வு செய்தனர். தொடர்ந்து இவரும் பட்டையை கிளப்பினார்.

16 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை செய்த முதல் இந்திய வீரர் ஆனார். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து சாதனை புரிந்து வந்ததால் ஹர்பஜன் சிங் இந்திய அணிக்குள் மீண்டும் வருவது மிகப்பெரிய கேள்விக்குறியானது. அதேநேரத்தில் மகேந்திர சிங் தோனியும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் கொடுத்து, அவரை காப்பாற்றி வைத்தார்..இந்திய அணியில் இருந்து ஹர்பஜன் சிங்கை ஓரம் கட்டியது எப்படி? கடைசியாக வாய்திறந்து உண்மையை கூறிய ரவிச்சந்திரன் அஸ்வின்! 3

இதன் காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மீது அவ்வப்போது ஹர்பஜன்சிங் பலமுறை தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்ததை நாம் பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். இந்நிலையில் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கை எப்படி ஓரம் கட்டினேன் என்று அஸ்வின் பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

நாட்டிற்காக ஆடுவது எனக்கு மிகப்பெரிய கவுரவம். ஒரு கிரிக்கெட் வீரராக அதுவே நமக்கு மிகப் சந்தோஷத்தை தரும். ஆனால் அணியில் எனது வேலையை நாம் சரியாக செய்தேன் . உள்ளூர் போட்டிகளில் அதிகமாக ஆடி இருந்தேன். அது எனக்கு பெரிதும் உதவியது.இந்திய அணியில் இருந்து ஹர்பஜன் சிங்கை ஓரம் கட்டியது எப்படி? கடைசியாக வாய்திறந்து உண்மையை கூறிய ரவிச்சந்திரன் அஸ்வின்! 2

அணியில் என் மீது பெரிய அழுத்தம் எதுவும் இல்லை. இந்திய அணிக்காக ஆடுகிறேன் என்பதை ரசித்து மகிழ்ந்து ஆடினேன். நான் எப்போதுமே வேறு ஒருவரது இடத்தை நிரப்பி இருக்கிறேன் என்று நினைத்ததில்லை. எனக்கான இடத்தை நான் தான் உருவாக்கிக் கொண்டேன். அதற்கு தோனி மிக முக்கிய காரணமாக இருந்தார் அவர் கொடுத்த ஆதரவு தான் இதற்கெல்லாம் காரணம் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *