வீட்டில் இருந்தாலும் கடமையை சரியாக செய்யும் தல தோனி !! 1

வீட்டில் இருந்தாலும் கடமையை சரியாக செய்யும் தல தோனி

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் மக்களை வீட்டிலேயே முடக்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மக்களை போலவே வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த இக்கட்டான நேரத்திலும் விளையாட்டு வீரர்கள் முழு உடற்தகுதியுடன் இருக்க வீட்டிலேயே தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேச வீரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட உடற்தகுதி அட்டவணையை பின்பற்றுகிறார்களா என்பதை ஆன்லைன் மூலம் அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர்.

வீட்டில் இருந்தாலும் கடமையை சரியாக செய்யும் தல தோனி !! 2

முன்னாள் கேப்டன் தோனி, அஸ்வின் ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய பெயர்கள். இவர்கள் தங்களின் விளையாட்டு அகாடமியின் மூலமாக ஆன்லைனில் வழக்கமான கிரிக்கெட் பயிற்சிகளை தொடர்ந்து வருகின்றனர். தோனி தனது கிரிக்கெட் அகாடமி மூலமாக பயிற்சியாளர்களுக்கு தகவல்களை வழங்கி அதன் மூலம் வகுப்புகள் எப்படி செல்கிறது என்பதை கண்கானித்து வருகிறார்.

மேலும் பேஸ்புக் லைவ் மூலமாகவும் நேரடியாக பயிற்சிகளை நேரடியாக பார்த்து வருகிறார். அதே போல அஸ்வின் அகாடமியில் ஆஃப் ஸ்பின்னரே நேரடியாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இந்த ஆன்லைன் வகுப்புகள் மக்களை பெரிய அளவில் கவர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சத்ரஜித் லஹிரி கூறுகையில், “ஒவ்வொரு வீடியோக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பதிவேற்றப்படும் அனைத்து தளத்திலும் ஒவ்வொரு வீடியோக்களுக்கும் குறைந்தபட்சமாக 10000 பார்வையாளர்கள் வருகின்றனர்” என்றார்.

வீட்டில் இருந்தாலும் கடமையை சரியாக செய்யும் தல தோனி !! 3

மேலும் லஹிரி கூறுகையில்,“கிரிக்கெட்டர் என்ற ஆப் உள்ளது. அதில் பயிற்சி வகுப்புகளை நாங்கள் பதிவேற்றுவோம். பயிற்சி மேற்கொள்பவர்களும் அவர்களின் வீடியோக்களை அப்லோடு செய்வார்கள். அதைப் பார்த்துவிட்டு நாங்கள் எங்களின் கருத்துக்களை தெரிவிப்போம். பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களும் அவர்களுக்கு வழங்கப்படும் தகவல்களை நன்கு புரிந்து கொண்டு செயல்படுகின்றனர். மாற்றம் தேவை என்றால் அதை புரிந்து கொண்டு சரி செய்து கொள்கின்றனர்” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *