டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களும் ஒருநாள் போட்டியில் 9891* ரன்களும் சர்வதேச டி20 போட்டிகளில் 1281 ரன்களும் அடித்து 6ஆவது இந்தியராக 16,000 ரன்களை கடந்துள்ளார் தோனி. மேலும் சங்ககாரவிற்கு அடுத்து விக்கெட் கீப்பராக 16,000 சர்வதேச ரன்களை அடித்துள்ளார் தோனி.
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தோனியின் சிறப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஷிகர் தவான் டக் அவுட் ஆகி வெளியேறினார். தவான் அவுட் ஆன சிறிது நேரத்தில் மளமளவென 3 விக்கெட்டுகள் சரிந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 பவுண்டரிகளை விளாசினார். அவரும் 10 ரன்னில் கேட்சாகி வெளியேறினார். அவரை தொடந்து புவனேஸ்குமாரும் டக் அவுட் ஆனதால் இந்திய அணி 29 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 50 ரன்களுக்குள் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்ற பரிதாப நிலை ஏற்பட்டது.
இந்த நேரத்தில் தோனியும், குல்தீப் யாதவும் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இடைஇடையே பவுண்டரிகளை அடித்தனர்.
டெஸ்ட் போட்டியில் தோனி ஓய்வு பெற்ற போதும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனி 65 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தோனி ஓய்வு பெறுவது குறித்து தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய போட்டி அமைந்தது. இந்தப் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 16 ஆயிரம் ரன்கள் கடந்து தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இதுவரை மொத்தம் 482 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 16 சதங்களையும் 100 அரைசதங்களையும் எடுத்துள்ளார்.
இந்திய அணியை பொருத்தவரை ஒரு போட்டியில் அதிக சதவீதம் ரன்கள் எடுத்தவர் என்ற மைல்கல்லையும் தோனி எட்டியுள்ளார். மொத்தம் எடுக்கப்பட்ட 112 ரன்னில் தோனி 65 ரன்கள் எடுத்தார். இது 58.3 சதவீதம் ஆகும். மற்ற வீரர்கள், எக்ஸ்ட்ரா அனைத்தும் சேர்த்து 47 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. சேவாக் இதற்கு முன்பு 56 சதவீதம் (112/200) ரன்கள் எடுத்தது மைல்கல்லாக இருந்தது. ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோரில் தனி நபரின் அதிகபட்ச ரன் தோனி எடுத்த 65 ரன்கள்தான்.