சூப்பர் ஃபோர் பிரிவின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இரு வெற்றிகளுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. ஆனால், இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவன், புவனேஸ்வர் குமார், பூம்ரா, சாஹல் ஆகிய 5 வீரர்களும் ஓய்வு காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதையடுத்து கேப்டன் பொறுப்பு தோனி வசம் சென்றுள்ளது.

696 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி கேப்டனாகச் செயல்படுகிறார் தோனி. கேப்டனாக விளையாடும் 200-வது ஒருநாள் ஆட்டம் இது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், இந்த ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டிக்கு அறிமுகமாகியுள்ளார். கே.எல். ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் சஹார், கலீல் அஹமது, சித்தார்த் கெளல் ஆகிய 5 வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
696 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாக மாறியுள்ளார் எம்.எஸ் தோனி. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு தேவைப் படுவதால் இளம் வீரர்கள் கொண்ட அணியை தோனியின் கையில் கொடுத்து மீண்டும் ஒருமுறை பதம் பார்க்க அனுப்பியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது.
37 வயதில் இந்திய அணியின் கேப்டனாக மாறியுள்ளதால் இந்திய அணிக்கு மிக அதிக வயதில் தலைமை தாங்கி வழி நடத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் அதிகமாக இதில் அதிக வயதில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த வீரர்கள் பட்டியல் கீழே…
சுனில் கவாஸ்கர் – 35 வயது 243 நாட்கள்
இந்திய அணி முதலில் பேட்டிங் ஜாம்பவானான இவர் இந்திய 35 வயது மற்றும் 243 நாட்களில் கேப்டனாக தலைமைதாங்கி வழிநடத்தினார் இந்தியாவில் முதன்முதலாக ஜாம்பவானாக வந்தவர் இவர்