கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் இவர் மட்டுமே.. அது சச்சின், விராட்கோலி இல்லை! சிஎஸ்கே வீரர் யாரை புகழ்கிறார்? 1

கிரிக்கெட் உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் இவர் தான்.. அது சச்சின், விராட்கோலி இல்லை – சென்னை அணியின் நட்சத்திரம் புகழாரம்!

கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் என்றால் அது இவர் மட்டுமே என இந்திய வீரரை குறிப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளார் விண்டீஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் இவர் மட்டுமே.. அது சச்சின், விராட்கோலி இல்லை! சிஎஸ்கே வீரர் யாரை புகழ்கிறார்? 2

விண்டீஸ் அணியின் மூத்த வீரர் பிராவோ, பல நாடுகளுக்கும் சென்று உள்ளூர் டி20 தொடர்களில் ஆடிவருகிறார். விண்டீஸ் அணி நிர்வாகத்தால் முறையாக வீரர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் இருந்ததால், சர்வதேச போட்டிகளில் சில ஆண்டுகள் பிராவோ ஆடவில்லை. வெளிநாடுகளில் உள்ள டி20 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்தார்.

பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2011ஆம் ஆண்டுகளில் இருந்து ஆடிவருகிறார். முதலில் ஐபிஎல் தொடர் துவங்கியபொழுது மும்பை அணிக்காக ஆடிவந்ததும் குறிப்பிடத்தக்கது. சென்னை அணிக்கு மாறியபிறகு, தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது.

பல நாடுகளின் டி20 லீக் போட்டிகளில் ஆடிய பிராவோ, கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் யார் என தனது கருத்தினை தெரிவித்துள்ளார். பிராவோ கூறியதாவது:

“என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் மிகப் பெரிய சூப்பர்ஸ்டார் தோனி. ஒருபோதும் ஸ்டார் என கட்டிக்கொள்ளமாட்டார். அவருடன் மிகச் சுலபமாக உங்களால் பேச முடியும். கிரிக்கெட் களத்துக்கு வெளியே வீடியோ கேம் விளையாடிக் கொண்டு மிக கேஷ்வலாக இருப்பார் தோனி. அவர் அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஆனால், தோனிதான் அவர்களில் எல்லோரிலும் மிக தன்னடக்கம் உடையவர். சிஎஸ்கே ஒரு ஸ்பெஷல் அணி. எங்களுக்குத்தான் மிக நம்பிக்கையான ரசிகர்கள் உள்ளார்கள்,” என்றார் பிராவோ. 

சிஸ்கே குறித்து மேலும் பேசிய பிராவோ, “சிஎஸ்கே அணியின் வெற்றிக்குப் பெரும் பங்கு தோனி மற்றும் ஃபிளெமிங்க இருவரையும் சாரும். சென்னை அணியின் உரிமையாளர்கள் ஃபிளெமிங்கையும் தோனியையும் முழுவதுமாக நம்புகிறார்கள். அணி வீரர்களும் தோனி மீது அவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள். அந்த அணியின் சூழலே ரம்மியமானது.” என்றார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *