ஐபிஎல் டாப் டீமான தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேட்ச் டிக்கெட் போல் தனது திருமண அழைப்பிதழை வடிவமைத்து ஈர்த்துள்ளார் தீவிர ரசிகர் கே.வினோத்.
கே.வினோத் கூறுவது என்ன? “சிஎஸ்கே மற்றும் தோனியின் சூப்பர் ரசிகனான நான் என்னுடைய திருமண அழைப்பிதழ் தனிச்சிறப்பாக அமைய வேண்டும் என்று எண்ணினேன்” என்கிறார் 29 வயது வினோத்.
இவருக்கு நேற்று, புதன்கிழமை திருமணம் சென்னையில் நடைபெற்றது.
ஐடி துறையில் பணிபுரியும் வினோத், சிஎஸ்கேவின் தீவிர ரசிகருமான கிராபிக் டிசைனருமான தன் நண்பரிடம் ஆலோசித்து இந்த சுவாரஸியமான அழைப்பிதழை வடிவமைத்துள்ளார்.
இவர் தோனியின், சிஎஸ்கேவின் மிகப்பெரிய ரசிகர் என்பதால் பல வீடியோக்களை இணையத்தில் ஏற்றி அவை வைரலாகியுள்ளன.
2015 ஐபிஎல் தொடரில் தோனியின் கையெழுத்திட்ட பேட் ஒன்றை இவருக்கு சிஎஸ்கே திடீரென பரிசளித்ததில் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் வினோத்.
2018 ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. பல தடைகளை மீறி தோனி இதனைச் சாதித்தது சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.