களமிறங்குகிறார் தோனி!! சென்னை அணி முதலில் பேட்டிங்!! 1

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கின்றன. மொத்தம் 56 லீக் போட்டிகள் கொண்ட தொடரில் இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ஐம்பதாவது போட்டி நடக்க இருக்கிறது.

இப்போட்டியில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை அணியும் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்

களமிறங்குகிறார் தோனி!! சென்னை அணி முதலில் பேட்டிங்!! 2

இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் இன்றைய போட்டியில் முதலிடம் பெறுவது இரு அணிகளுக்கும் குறிக்கோளாக இருக்கும் அதாவது டெல்லி அணி முதலிடத்தை தக்க வைக்கவும் சென்னை அணி மீண்டும் முதலிடத்தை பிடிக்கவும் போராடும் என்பதால் போட்டியில் பரபரப்பு நிறைந்திருக்கும்.

சென்னை அணிக்கு கேப்டன் தோனி இன்று களமிறங்குகிறார். அதேபோல் டு ப்லெஸிஸ் மற்றும் ஜடேஜா இருவரும் இன்றைய போட்டியில் ஆட இருக்கிறார்கள்.

களமிறங்குகிறார் தோனி!! சென்னை அணி முதலில் பேட்டிங்!! 3

டெல்லி அணிக்கு இசாந்த் சர்மா மற்றும் ரபாடா இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜகதீசா சுச்சித் மற்றும் ட்ரென் போல்ட் இருவரும் களமிறங்குகின்றனர்.

இன்றைய போட்டியில் ஆடும் இரு அணி வீரர்களின் முழு பட்டியல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஷேன் வாட்சன், ஃபஃப் டு பிளஸ்ஸிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி (கேப்டன் & கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி

ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் ஐயர் (கேப்டன்), ரிஷப் பன்ட் (கீப்பர்), கொலின் இங்ராம், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், ஆக்ஸார் படேல், ஜகதீஸ்ஷா சுசித், சந்தீப் லேமிச்சேன், அமித் மிஸ்ரா, ட்ரெண்ட் போல்ட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *