இவர்தான் நான் பார்த்த வீரர்களில் சிறந்த பினிஷர், டுப்லஸ்ஸிஸ் கூறிய அந்த வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த டுப்லஸ்ஸிஸ். இவர் சென்னை அணிக்காக பேட்டிங்கில் மிக அற்புதமாக விளையாடி வந்து கொண்டிருக்கிறார் . மேலும் பீல்டிங் செய்வதில் இவரைப்போல ஒரு வீரர் பிறந்துதான் வரவேண்டும். அந்த அளவுக்கு பவுண்டரி லைனில் நின்று கொண்டு தன் உயரத்திற்கு மேல் வரும் பந்துகளை அழகாக தாவி பிடித்து எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் செய்வார்.

சென்னை அணி வீரர்களில் இவருக்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம் என்றுதான் கூறவேண்டும். மற்ற வீரர்களை கூட அவ்வளவாக கேலி கிண்டல் செய்து வருவது வழக்கமான விஷயம். ஆனால் இவருக்கு அவ்வளவாக கேலி கிண்டல்கள் வராது. இவரை சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து அணி ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்றே கூறலாம். இவர் சமீபத்தில் தான் விளையாடிய கிரிக்கெட் வீரரகளுள் மிகச்சிறந்த பினிஷர் யார் என்று கூறியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி தான் அந்த வீரர்
டுப்லஸ்ஸிஸ் இடம் நீங்கள் விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்த பினிஷர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இவரிடம் அந்த கேள்வி கேட்டவுடன் அடுத்த நிமிடமே ஏபி டிவிலியர்ஸ் தான் மிகச்சிறந்த பினிஷர் என்று அவர் கூறுவார் என்று நினைத்த வேளையில் எதிர்பாராதவிதமாக மகேந்திர சிங் தோனியின் பெயரை அவர் கூறினார். அவர் கூறியதில் அவ்வளவு பெரிய ஆச்சரியம் இல்லை. ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் ஒரு மிகச்சிறந்த பினிஷர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவுக்காக விளையாடும் போதிலும் சென்னை அணிக்காக விளையாடும் போதிலும் இறுதி ஓவர்களில் வந்து மிக அற்புதமாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்வதில் மகேந்திர சிங் தோனி ஒரு ஆகச் சிறந்த பேட்ஸ்மேன்.
பினிஷராக மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி எந்த அளவுக்கு அதிரடியாக விளையாடுவார் என்று கூற வேண்டும் என்றால், இதுவரை 106 ஐபிஎல் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சிக்சர் அடித்த ஒரே வீரர் இவர் மட்டும்தான். வேறு யாரும் இந்த அளவுக்கு சிக்ஸர்கள் அடித்தது கிடையாது. அதேபோல இறுதி ஓவர்களில் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இதுவரை 162 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக போல்லார்டு 135 சிக்ஸர்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் 20 வது ஓவரில் மகேந்திர சிங் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 244 ஆகும். அதைப்போல இறுதி ஓவர்களில் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அதிக ரன்கள் குவித்த ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி மட்டும்தான்.
டுப்லஸ்ஸிஸ் இவ்வாறு கூறியது ஆச்சரியப்படும் செய்தி அல்ல. ஐபிஎல் தொடர் ஆரம்பத்தில் இருந்து பார்த்து வரும் அனைவருக்கும் தெரியும் மகேந்திர சிங் தோனி ஒரு ஆகச் சிறந்த பினிஷர் தான் என்று.