இத்தனை வருஷமா பாக்றேன்.. எந்த கிரவுண்டுல ஆடினாலும், தோனிக்கு அது ஹோம் கிரவுண்டு தான்; சப்போர்ட் அப்படி இருக்கும் - கீரன் பொல்லார்ட் கருத்து! 1

கடந்த காலங்களில் சச்சின் டெண்டுல்கருக்கு இருந்ததைப் போல, சமகாலத்தில் தோனி-க்கு இருக்கிறது. இந்தியாவில் எங்கு சென்றாலும் அது அவருக்கு ஹோம் கிரவுண்ட் போல ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்று பேசியுள்ளார் கீரன் பொல்லார்ட்.

இந்த வருட ஐபிஎல் சீசனில் இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, அகமதாபாத்தில் நடந்த போட்டியில் தோல்வியையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றியையும் பெற்றது.

இத்தனை வருஷமா பாக்றேன்.. எந்த கிரவுண்டுல ஆடினாலும், தோனிக்கு அது ஹோம் கிரவுண்டு தான்; சப்போர்ட் அப்படி இருக்கும் - கீரன் பொல்லார்ட் கருத்து! 2

சிஎஸ்கே அணிக்கு மூன்றாவது லீக் போட்டி, வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது லீக் போட்டி வன்கடே மைதானத்தில் நடைபெறுவதால் சொந்த மைதானத்தில் வெற்றி பெற்று கணக்கை துவங்க வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது. இரு அணிகளும் மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தனை வருஷமா பாக்றேன்.. எந்த கிரவுண்டுல ஆடினாலும், தோனிக்கு அது ஹோம் கிரவுண்டு தான்; சப்போர்ட் அப்படி இருக்கும் - கீரன் பொல்லார்ட் கருத்து! 3

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அதைக்காண ரசிகர்கள் கூட்டம் அரங்கம் நிறைந்திருந்தது. முதல் ஓவரில் துவங்கி கடைசி ஓவர் வரை “தோனி.. தோனி..” என்ற கரகோஷம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

அடுத்த போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுவதால், மும்பையில் தோனிக்கு சப்போர்ட் எப்படி இருக்கும்? மும்பை இந்தியன்ஸ் அணி தோனியின் சமீபத்திய ஃபார்மை எப்படி பார்க்கிறது? என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் கோச் கீரன் பொல்லார்ட் பேசியுள்ளார். அவர் பேசியதாவது:

“கடந்த காலங்களில், சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் எந்த மைதானத்திற்கு சென்றாலும் அது அவருடைய ஹோம் கிரவுண்ட் போல சப்போர்ட் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சப்போர்ட் சமகாலங்களில் மகேந்திர சிங் தோனிக்கு இருக்கிறது. இந்தியாவில் எந்த மைதானத்தில் தோனி விளையாடினாலும் அது அவரது ஹோம் கிரவுண்ட் போன்று ரசிகர்களின் சப்போர்ட் இருக்கிறது.” என்று புகழாரம் சூட்டினார்.

இத்தனை வருஷமா பாக்றேன்.. எந்த கிரவுண்டுல ஆடினாலும், தோனிக்கு அது ஹோம் கிரவுண்டு தான்; சப்போர்ட் அப்படி இருக்கும் - கீரன் பொல்லார்ட் கருத்து! 4

தோனியின் சமீபத்திய ஃபார்ம் பற்றி பேசிய பொல்லார்ட் கூறுகையில், “கடந்த சில சீசன்களாக, தோனி டைம் எடுத்து விளையாடி வந்தார். இந்த சீசனில் வந்த வேகத்திலேயே அடிக்கத் துவங்கிவிடுகிறார். இதனை கண்டிப்பாக கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் தோனி மிகவும் அபாயகரமான வீரர். ஆட்டத்தை மாற்றிவிடுவார். டெத் ஓவர்களில் அவரின் ஆட்டத்தை பலமுறை பார்த்திருக்கிறோம்.  அவருக்கென்று தனி திட்டமில்லாமல் நாங்கள் இறங்க முடியாது.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *