தோனிக்கு டிப்ஸ் கொடுத்த ஹஸ்ஸி… “நோ தேங்க்ஸ்” தல தோனி கொடுத்த அசத்தல் ரிப்ளை!
ரஷீத் கானை எதிர்கொள்ள டிப்ஸ் கொடுத்த எனக்கு தோனி கொடுத்த பதில் இதுதான் என நினைவுகளை பகிர்ந்துள்ளார் மைக் ஹஸ்ஸி.
சூத்தாட்ட புகார் காரணமாக இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு சென்னை அணி 2018ல் சிறப்பாக ‘கம் பேக்’ கொடுத்தது. குறிப்பாக, இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் இரு அணிகளும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 140 ரன்கள் எடுத்தது.
இதனை சேஸ் செய்த சென்னை அணி 3வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இரு ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டும் வந்து கோப்பையை சென்னை அணி வென்றதால் இது மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், 2018 ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாக, ஹைதராபாத் அணியுடனான போட்டிக்கு முன் நிகழ்ந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார் மைக் ஹஸ்ஸி.
அவர் கூறுகையில், 2018 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டிக்கு முன்பு, ரஷீத் கான் எப்படி பந்துவீசுவார் என்பதை கண்காணித்து வந்தோம். ரஷீத் கான் லெக் ஸ்பின் வீசும்போதும், கூக்ளி வீசும்போதும் எப்படி பந்தை கையில் எவ்வாறு பிடித்து வீசுவார் என்ற தகவல் எனக்கு வீடியோ அனலிஸ்ட் மூலம் தெரியவந்தது. சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பவுலராகவும் சிறந்த ஸ்பின்னராகவும் இருந்ததால் அவரது பவுலிங் முறை குறித்து வீரர்களுக்கு தெரியப்படுத்தினோம்.
போட்டி நடந்துகொண்டிருக்கையில், சிஎஸ்கே வெற்றிபெற 98 பந்தில் 116 ரன்கள் தேவைப்பட்டது. அச்சமயம் களத்திற்கு சென்ற தோனி 18 பந்துகள் பேட்டிங் ஆடி 9 ரன்கள் மட்டுமே அடித்து ரஷீத் கானின் சூழலில் போல்டானார்.
ஆட்டமிழந்து நேரடியாக என்னிடம் வந்த தோனி, டக் அவுட்டில் உட்கார்ந்திருந்த என்னிடம் “நான் இனிமேல் என் பாணியிலேயே ஆடிக்கொள்கிறேன்” என்று கூறினார் என மைக் ஹசி பகிர்ந்துகொண்டார்.