தோனி பேன்ஸ்-க்கு இனிமே ஜாலி.. புதிய கிரிக்கெட் தொடரிலும் தோனி பங்கேற்கலாம்.. பிசிசிஐ அனுமதி தேவையில்லை; முன்னாள் வீரர் கொடுத்த செம்ம யோசனை!
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி இனிமேல் இந்த கிரிக்கெட் லீக் போட்டிகளிலும் ஆடவேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்ட தினமாக நாடே கொண்டாடும் வந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது சோகமான நாட்களாகவே அமைந்தது. குறிப்பாக தோனியின் ரசிகர்களாக இருப்பவர்களுக்கு அது நிச்சயம் மோசமான நாளாகவே அமைந்திருக்கும்.
ஏனெனில் எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இவர் அறிவித்த சில நிமிடங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு பெரும் இடியாக அமைந்திருக்கும்.
இருப்பினும் இனி தோனி சென்னை அணிக்கு தொடர்ந்து ஆடுவார் என்கிற செய்தி தெரியவந்ததால் சற்று ஆறுதல் அடைந்தனர்.
இந்நிலையில் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இனி வெளிநாடுகளில் நடைபெறும் அனைத்து டி20 லீக் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியும். இதற்கு பிசிசிஐ இடம் எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை என குறிப்பிட்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, ஒரு அட்டகாசமான யோசனையையும் தெரிவித்திருக்கிறார்.
வார்னே சமீபத்தில் நேரலை ஒன்றில் பேசியபோது, ” தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் வருத்தமான செய்தியாக இருக்கும் என எனக்குத் தெரியும். ஆனால் பிசிசிஐ ஒப்பந்தப்படி இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் ஓய்வு பெற்று விட்டால் அவர் வெளிநாட்டு டி20 போட்டிகளில் பங்கேற்கலாம். இதனடிப்படையில் லண்டனில் நடைபெற உள்ள “தி 100” எனப்படும் 100 பந்துகள் மட்டுமே வீசப்படும் கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்று சிறப்புமிக்கதாக ஆக்க வேண்டும்.
தோனி விளையாட விரும்பினால் நிச்சயம் நான் அவரை இங்கு அழைத்து வர தயாராக இருக்கிறேன். தோனியின் கேப்டன்சி எப்படிப்பட்டது என நான் நன்கு அறிவேன். தனி மனிதராக, அவர் கேப்டன் பொறுப்பு மட்டுமே அணியை பலமுறை வெற்றிபெற வைத்திருக்கிறது.” என குறிப்பிட்டார் .
Fancy it, MS? ?@ShaneWarne makes an on-air plea to MS Dhoni to come and join London Spirit in the Hundred next year ? pic.twitter.com/wSughElbex
— Sky Sports Cricket (@SkyCricket) August 15, 2020