"வெளியில இருந்து கருத்து சொல்றது ஈஸி., ஆனால்.." - இந்திய அணி மீது வரும் கிண்டல்களுக்கு தல தோனி டக்கர் பதிலடி! 1

வெளியில் இருந்து விமர்சிப்பதை விட உள்ளே இருந்து விளையாடுபவர்களுக்கே அந்த அழுத்தம் புரியும் என்று சமீபத்தில் வரும் கிண்டல்களுக்கு மகேந்திர சிங் தோனி பதில் கொடுத்திருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி வெளியேறியது. அதற்கு காரணம் சரியாக பில்டிங் செய்யவில்லை, முக்கியமான கட்டத்தில் கேட்சுகளை விட்டது மற்றும் பந்து வீச்சில் சொதப்பல் என அடுக்கடுக்காக கூறப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் பல விமர்சகர்களும் இது போன்ற விமர்சனங்களை முன் வைத்தனர்.

"வெளியில இருந்து கருத்து சொல்றது ஈஸி., ஆனால்.." - இந்திய அணி மீது வரும் கிண்டல்களுக்கு தல தோனி டக்கர் பதிலடி! 2

இந்நிலையில் தற்போது இந்திய அணி மீது வரும் விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் பொதுவாக எந்தவித கருத்துக்களையும் கூறாமல் அமைதியாக இருப்பார். ஆனால் இந்த விஷயத்தில் அவர் கருத்து கூறியிருப்பது அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

“வெளியில் அமர்ந்து கொண்டு, நீங்கள் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று குறிப்பிடுவது எளிது. ஆனால் உண்மையில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. நாம் எப்படி நமது நாட்டிற்காக விளையாடுகிறோமோ! அதே போன்று தான் எதிரணியும் விளையாடுகிறது. மைதானத்தில் வீரர்கள் சில நேரங்களில் தவறு செய்வது இயல்பு. அதேபோல் கேட்சுகளை விடுவதும் இயல்பு. அந்த தருணத்தில் குறிப்பிட்ட வீரர் எந்த அளவிற்கு அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை அவர் மனநிலையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும். கேட்ச் விட்டார் என்பதற்காக தொடர்ந்து அவர் மீது விமர்சனங்களை வைப்பது எந்தவித முன்னேற்றத்தையும் கொடுக்காது.

"வெளியில இருந்து கருத்து சொல்றது ஈஸி., ஆனால்.." - இந்திய அணி மீது வரும் கிண்டல்களுக்கு தல தோனி டக்கர் பதிலடி! 3

மைதானத்தில் குறைந்தபட்சம் 50000 மக்கள் அவரை கவனித்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல் தொலைக்காட்சி மூலம் பல கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள. ஆகையால் வீரர்கள் வேண்டுமென்றே இந்த தவறினை செய்யமாட்டார்கள். அழுத்தம் அதிகமாக இருந்து, அதை எப்படி கையாள வேண்டும் என்பதை அறியாமல் தவறிழைக்கிறார்கள். அதனை சரி செய்துகொள்ள வேண்டும் என அவர்களும் நினைப்பார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக விமர்சனங்களை முன்வைக்க பழகுங்கள். குறை கூறுவது மட்டுமே நோக்கமாக இருக்க வேண்டாம்.” என்று தெளிவாக பேசினார் தோனி.

"வெளியில இருந்து கருத்து சொல்றது ஈஸி., ஆனால்.." - இந்திய அணி மீது வரும் கிண்டல்களுக்கு தல தோனி டக்கர் பதிலடி! 4

மகேந்திர சிங் தோனி பேட்டியளித்த நாளன்று தான் சரியாக, 15 வருடங்களுக்கு முன்பு, 2007ம் ஆண்டு இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *