இலங்கைக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது இன்னிங்சை துவங்கியது. ஆரம்பத்தில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி சென்றனர். சூர்யகுமார் யாதவ் அதுவும் மிக அற்புதமாக விளையாடி அரைசதம் குவித்தார். அதேபோல குருனால் பாண்டியா 35 ரன்கள் எடுத்து சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
இருப்பினும் ஒரு கட்டத்தில் இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து கிட்டத்தட்ட தோல்வியின் பிடியில் இருந்தது. ஆனால் அப்போது புவனேஸ்வர் குமார் உடன் இணைந்து தீபக் சஹர் மிக அற்புதமாக விளையாடிய இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். 69 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றிக்கு தீபக்சேகர் துணை நின்றார். புவனேஸ்வர் குமார் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை அவருக்கு துணையாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திர சிங் தோனி விளையாடியது போலிருந்தது
ஷேவாக் நீண்ட நாட்கள் கழித்து இப்படி ஒரு அற்புதமான ஒருநாள் போட்டியை கண்டுகளித்ததாக அண்மையில் கூறியுள்ளார். மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு இறுதியில் எப்படி நம்பிக்கை அழைப்பாரோ அதேபோல அந்த போட்டியில் தீபக் சஹர் நம்பிக்கை அளித்ததாக வீரேந்திர சேவாக் தற்பொழுது கூறியிருக்கிறார். மேலும் இந்திய அணி வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
தீபக் சஹர் பௌலிங் விஷயத்தில் மிக அற்புதமாக செயல்பட கூடிய ஒரு வீரர் ஆனால் இந்த போட்டியின் மூலம் அவர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துவிட்டார். குறிப்பாக இந்திய அணி தோற்று விடும் என்று இருந்த நெருக்கடி நிலையில் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது சாதாரண விஷயம் கிடையாது. மகேந்திர சிங் தோனி வழக்கமாக கடைசியில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைப்பார் இவர் மாறுதலாக பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார் என்று சந்தோஷமாக விரைந்த விஷயமாக கூறியுள்ளார்.

விரேந்திர ஷேவாக் கூறியது சரி என்று ஒப்புக்கொண்ட ஆஷிஷ் நெஹ்ரா
ஷேவாக் கூறியது சரி என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆசிஸ் நெஹரா தற்பொழுது கூறியுள்ளார். மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவரிடம் இருக்கும் பண்பு அந்தப் போட்டியில் தீபக் சஹர் இடம் வெளிப்பட்டது.
இறுதிவரை அமைதியாக நின்று மோசமான பந்துகளை மட்டும் குறி வைத்து அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தீபக் சஹர் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக தற்போது தன்னுடைய பெயரை மாற்றி அமைத்துள்ளார். நிறைய முறை இலங்கை பந்துவீச்சாளர்கள் அவரை அவுட் செய்யும் விதமாக பந்து வீசினார்கள், ஆனால் அந்த பந்துகளை எல்லாம் ஆடாமல் தவிர்த்துவிட்டு மோசமான பந்துகளை மட்டும் குறி வைத்தார். தீபக் சஹர் அப்படி இறுதிவரை நின்று விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் ஆசிஷ் நெக்ரா கூறி முடித்தார்.