நெஹ்ரா மாதிரி தோனி வருவார்! - முன்னாள் வீரர் கருத்து! வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா? 1

நெஹ்ரா மாதிரி தோனி வருவார்! – முன்னாள் வீரர் கருத்து! வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா?

நெஹ்ராவைபோல தோனி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக ஆடுவார் என முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு எவ்வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என தகவல்கள் வெளியாகின.

நெஹ்ரா மாதிரி தோனி வருவார்! - முன்னாள் வீரர் கருத்து! வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா? 2

ஆனாலும் தற்போது வரை தோனி இந்திய அணிக்கு திரும்பாததால், பலர் அவர் ஓய்வு முடிவை விரைவில் அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியிட்டு வந்தனர். மேலும், பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலிலிருந்து தோனியின் பெயர் நீக்கப்பட்டது. இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதற்கிடையில், “டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெற வேண்டும் என்றால், ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக அமைய வேண்டும்.” என தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்திருந்தார். ஐபிஎல் தொடரும் நடைபெறாததால் அதுவும் நிராசையானது.

நெஹ்ரா மாதிரி தோனி வருவார்! - முன்னாள் வீரர் கருத்து! வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா? 3

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஸ் நெஹராவைப் போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு ஆடுவார் என முன்னாள் வீரர் கிரண் மோரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிஸ் நெஹரா, 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு எவ்வித சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க வில்லை அதன் பிறகு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு 2016ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்காக களம் இறங்கினார். தோனியும் இதே போல நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு திரும்புவார் என நம்பிக்கை கிரண் மோரே தெரிவித்துள்ளார்.

நெஹ்ரா மாதிரி தோனி வருவார்! - முன்னாள் வீரர் கருத்து! வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா? 4

அவர் அளித்த பெட்டியில், “தோனியின் ஓய்வு முடிவை கணிப்பது கடினம். ஏனெனில் முடிவு அவர் கையில் உள்ளது. ஒருவேளை அவரது மனம், போட்டியில் பங்கேற்க விரும்பலாம். ஆனால் உடல், வேண்டாம் என்று கூறலாம். சமீபத்தில் சென்னையில் நடந்த ஐ.பி.எல்., சென்னை அணிக்கான பயிற்சி முகாமில் இவர் முழு உடற்தகுதியுடன் காணப்பட்டார். இதனால் இவர் மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.

டென்னிஸ் போட்டியில் 39 வயதில் கூட சிறப்பாக விளையாடுகின்றனர். நீங்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால் வயது ஒரு பிரச்னை அல்ல. முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்கி சிறப்பாக விளையாடினார். ஒருவேளை அவர் ஓய்வை அறிவித்தாலும், அவரது முடிவுக்க மதிப்பளிக்க வேண்டும்.” என்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *