ஓய்வு பெறுகிறார் தல தோனி..? முன்னாள் கேப்டன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !! 1

ஓய்வு பெறுகிறார் தல தோனி..? முன்னாள் கேப்டன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து சத்தமில்லாமல் ஓய்வு பெற்றுவிடுவார் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெறுகிறார் தல தோனி..? முன்னாள் கேப்டன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !! 2
The 13th edition of the Indian Premier League (IPL) has faced an uncertainty owing to the Coronavirus scare. The tournament has already been postponed from March 29 till April 15 and now, all the eight franchises have called off their respective pre-tournament camps till a new notice has been issued.

இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சுனில் கவாஸ்கரும், “டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் தோனி இடம்பெற வேண்டும் என நான் நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், அது நடைபெற பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

ஓய்வு பெறுகிறார் தல தோனி..? முன்னாள் கேப்டன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !! 3

இந்திய அணி நீண்ட தூரம் சென்று விட்டது. மற்ற வீரர்களைப் போல் தோனி தன்னுடைய ஓய்வை மிகப்பெரிய அறிவிப்பாக வெளியிடமாட்டார். சத்தமே இல்லாமல் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *