ரிஷப் பண்ட் செய்த ஸ்டம்பிங்கை பார்த்தால் தோனி நிச்சயம் பெருமைப்படுவார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் மைதானம் மிகவும் ஸ்லோ ஆனது. அச்சமயம் அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பந்துவீசிய விதம் இந்திய அணிக்கு தற்போது வெற்றியை பெற்று தந்திருக்கிறது என்றே கூறலாம்.
இவர்களுடன் சேர்ந்து ரிஷப் பண்ட் மிகவும் பாராட்டுக்கு உரியவர். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் துவக்க வீரர்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த போது, விக்கெட் வீழ்த்த முடியாமல் பவுலர்கள் திணறினர். அப்போது கீப்பிங்கில் நன்றாக செயல்பட்டு அசாத்தியமாக கேட்ச் பிடித்தவர் ரிஷப் பண்ட். அந்த கேட்ச் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இரண்டாவதாக, வங்கதேச அணியின் கீப்பர் நூருல் ஹாசன் நூல் அளவில் கிரீசை விட்டு வெளியே வந்ததை கவனித்து, மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார் ரிஷப் பண்ட். நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்த நேரத்தில் இந்திய அணிக்கு கிடைத்த விக்கெட் அது. இதற்கு பல்வேறு பாராட்டுகளும் ரிஷப் பண்ட்-க்கு கிடைத்தது.
அத்துடன் ஸ்லோ-திருப்பம் இருக்கும் பிட்சில் கீப்பிங் செய்வது எளிதல்ல. அதை நன்றாக செய்து முடித்தார் ரிஷப் பண்ட்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் செய்த ஸ்டம்பிங் பார்த்தால் அவரின் ஆஸ்தான குரு தோனி நிச்சயம் பெருமிதம் அடைவார் என கருத்து தெரிவித்திருக்கிறார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் பேசியதாவது:
“தோனியை பின்பற்றி வருகிறார் ரிஷப் பண்ட். வங்கதேசம் அணியுடன் நடந்த போட்டியில் ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் செய்த விதத்தைப் பார்த்து நிச்சயம் தோனி பெருமிதமாக உணர்வார். பேட்ஸ்மேனை ஒட்டி வந்த பந்தை கணித்து பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு விக்கெட் கீப்பராக இது எனக்கு நன்கு தெரியும். ஆனால் உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்து, பந்தை பிடித்து மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்திருக்கிறார் ரிஷப் பண்ட்ம் இவ்வளவு விரைவாக ரியாக்ட் செய்வது என்பது தோனிக்கு பிறகு நான் ரிஷப் பண்ட்-இடம் மட்டுமே காண்கிறேன்.” என்றார் தினேஷ் கார்த்திக்.
வீடியோ: