தோனியின் இந்த திடீர் ஓய்விற்கு எடப்பாடி பழனிச்சாமி என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்விற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்த மகேந்திர சிங் தோனி, 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணியின் 3 வித போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகி சக வீரராக விளையாடி வந்தார்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. அப்போது இருந்து தோனி ஓய்வு குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தன. இதற்கு அவர் எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் சாதித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய வீரர்கள் பங்கேற்கும் தொடராக ஐபிஎல் தொடர் நடக்கவிருக்கிறது.
இதில் சுமார் ஒரு வருட காலத்திற்கு பிறகு தோனியை பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்தார். இந்த முடிவை அறிந்த ரசிகர்கள் பலர் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.
தோனியின் இந்த ஓய்வு முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரையும் பாதித்திருக்கிறது. ஓய்வு குறித்து அவரவர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலை தளங்களின் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் இந்த ஓய்வு முடிவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது கருத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஓய்வு குறித்து அவர் கூறுகையில், “இந்திய அணிக்காக 331 போட்டிகளில் கேப்டனாக திகழ்ந்து வந்த தோனி மூன்று முறை கோப்பைகளை பெற்றுத்தந்து பெருமை சேர்த்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் சரித்திரத்தில் பொறிக்கப்படும். அவரின் புகழ் மற்றும் சாதனைகள் அனைத்தும் இந்திய ரசிகர்களால் தொடர்ந்து பேசப்படும்.” என பதிவிட்டு இருந்தார்
புதிய இந்தியாவின் புதுயுக இளைஞர்களின் எழுச்சியை எடுத்து காட்ட கூடிய மாதிரியாக திகழ்ந்த #Dhoni குவித்த வெற்றிகள் வரலாற்றில் நிலைத்திருக்கும்,
அவரது எதிர்காலம் சிறக்க என் மனங்கனிந்த வாழ்த்துக்கள். pic.twitter.com/bjuFArrB3D— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 16, 2020