இந்தியாகிட்ட சிக்கி இங்கிலாந்து அணி என்ன பாடுபட போகுதோ..? முன்னாள் வீரர் !! 1

இந்தியாகிட்ட சிக்கி இங்கிலாந்து அணி என்ன பாடுபட போகுதோ..? முன்னாள் வீரர் 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெல்ல இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக, முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செல்லும் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி, ஜூலை 3ம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக வலது தோள்ப்பட்டை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆண்டர்சன் தற்போது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டில் உள்ள உடற்தகுதி மையத்தில் தங்கி முழுவதுமாக குணமடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாகிட்ட சிக்கி இங்கிலாந்து அணி என்ன பாடுபட போகுதோ..? முன்னாள் வீரர் !! 2 

இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயான் சாப்பல், இத்தொடரை இந்திய அணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயான் சாப்பல் கூறுகையில்,‘இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங்கை தற்போது பார்க்கும் போது, இந்திய அணிக்கு எதிராக என்ன செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை. தற்போது இந்திய அணி உள்ள பார்மை பார்க்கும் போது சொந்தமண்ணில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளையும் வீழ்த்தும் தகுதியுடன் உள்ளது.’ என்றார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *