சும்மா எல்லாத்துக்கும் இந்தியாவ இழுக்காதீங்க; பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்த இலங்கை !! 1

சும்மா எல்லாத்துக்கும் இந்தியாவ இழுக்காதீங்க; பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்த இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்ததற்கு இந்தியாதான் காரணம் என்ற பாகிஸ்தான் அமைச்சரின் கருத்தை இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2009-ம் ஆண்டு கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். அதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகின்றன.

சும்மா எல்லாத்துக்கும் இந்தியாவ இழுக்காதீங்க; பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்த இலங்கை !! 2

இந்தச் சூழலில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இடையேயான தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்கவில்லை என்று இலங்கை வீரர்கள் 10 பேர் விலகினர். இதனையடுத்து பாகிஸ்தான் அறிவியல் அமைச்சர் பவத் சவுத்ரி, இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் வர மறுத்ததற்கு இந்தியா தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர்,  “இலங்கை வீரர்கள், பாகிஸ்தான் செல்வதை தவிர்க்காவிட்டால் ஐபிஎல்- தொடரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று இந்தியா மிரட்டியதை அடுத்துதான், அவர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுத்துள்ளனர்” எனக் கூறினார்.

சும்மா எல்லாத்துக்கும் இந்தியாவ இழுக்காதீங்க; பாகிஸ்தானிற்கு பதிலடி கொடுத்த இலங்கை !! 3

இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் பவுத் சவுத்ரியின் கருத்தை இலங்கையின் விளையாட்டு அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சில் உண்மை இல்லை. இலங்கை வீரர்கள் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலை கருத்தில் கொண்டே பாகிஸ்தான் செல்லவில்லை என்ற முடிவை எடுத்தனர். எனவே யார் விருப்பம் தெரிவித்தார்களோ அவர்களை மட்டுமே பாகிஸ்தான் தொடருக்கு தேர்வு செய்திருக்கிறோம். நாங்கள் முழு பலத்துடன் தான் பாகிஸ்தான் செல்கிறோம். பாகிஸ்தான் அணியை வீழ்த்துவோம்” எனத் தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *