இந்தியா – இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில களம் இறங்கிய இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. பின்னர் 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியால் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் இந்தியா 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் டோனி விளையாடி வருகிறார். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு கிரிக்கெட்டின் கடவுளாக டோனியை ரசிகர்கள் நினைத்து வருகிறார்கள்.
நேற்றைய போட்டியில் டோனி விக்கெட் கீப்பராக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ரசிகர் தடுப்புச் சுவரை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்தா். அவர் டோனியை நோக்கி ஓடி, அவரது காலை தொட்டு வணங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு வீரர் விரைவாக வந்து அந்த ரசிகரை அழைத்துச் சென்றார். இதனால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த போட்டியின் போது தோனி கீப்பிங்கில் வெப்த த்ரோவை பிடித்து அடிக்காமல் அப்படியே விட்டுவிட்டார். அதாவது, களத்தில் மேத்யூஸ் மற்றும் திரிமாண்ணே ஆகியோர் இருந்தனர். மேத்யூஸ் இரண்டாவது ரன் எடுக்க கீப்பர் எண்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். தோனிக்கு எறிந்த பந்தை அவர் பிடித்து அடிக்காமல், அப்படியே கையில் இடையில் விட்டு ஸ்டம்பை அடிக்க செய்தார். அதுவும் சரியகா ஸ்டம்பில் பட்டது.
அக்டோபார் 27ஆம் தேதியில் இருந்து, ஐ.சி.சி’யால் விதிக்கப்பட்ட விதிகளின் படி,.
பந்தை கையில் பிடித்து தான் எறிய வேண்டும், கையில் இல்லாதது போல காயத்ரி எறிந்தாலோ, அல்லது வேறுமாதிரியாக பேட்ஸ்மேனுக்கு தெரியாமல் பந்து எரியப்பட்டாலோ அது விதியை மீறிய செயலாகும். அப்படி தான் தோனி செய்திருக்கிறார்.
இதனால், 5 ரன் அபராதமாக எதிரணிக்கு வழங்கப்படும். ஆனால், நேற்று அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை. தோனியின் இந்த செயல் தற்போது விவாதம் ஆகியுள்ளது.