இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கான தொடர்களில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. தற்போது பல்வேறு இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் ராகுல் டிராவிட் கோச்சிங் குறித்து பாசிட்டிவாக நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளருமான திலிப் வெங்சர்க்கார் ராகுல் டிராவிட் இந்த விஷயங்களை செய்வது ஒன்றும் புதியது கிடையாது. இதை அவர் தேசிய கிரிக்கெட் அகடமியில் இதற்கு முன்பே செய்து இருக்கிறார் என்று விளக்கமளித்துள்ளார்

தேசிய கிரிக்கெட் அகடமியில் ராகுல் டிராவிட் செய்த விஷயங்கள்
கடந்த சில வருடங்களாகவே தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் சிறப்பாக தனது பணியை செய்து வருகிறார். அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிக்கு அவர் தலைமை பயிற்சியாளராக கோச்சிங் கொடுத்து வருவது நம் அனைவருக்கும் தெரியும். தற்பொழுது இந்த இங்கிலாந்து சுற்றில் விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வீரர்கள் இதற்கு முன்பே ராகுல் டிராவிட் தலைமையின் கீழ் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற்று இருந்திருக்கிறார்கள்.
அவருக்கு கீழ் இதற்கு முன்பே விளையாடிய காரணத்தினால் வீரர்களின் மனப்பான்மையை ராகுல் டிராவிட் இதற்கு முன்பே கணித்து வைத்திருப்பார். எனவே எந்த வீரர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற யுக்தி அவருக்கு கைவந்த கலை. அதன் வெளிப்பாடே இந்திய அணியின் மகத்தான வெற்றி என்றும், இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது என்றும் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா பந்து வீசுவது அளவில்லா மகிழ்ச்சியை கொடுக்கிறது
ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களுக்கு பிறகு பந்து வீசுவது பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஒரு அணியில் பேட்டிங் விளையாடுவதற்கும் மட்டும் பயன்படாமல் பௌலிங் வீசுவதன் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று பலப்படும். ஆறாவது பந்துவீச்சாளராக அவர் நிச்சயமாக இனி வரும் போட்டிகளில் செய்யப்படுவார். மேலும் பேட்டிங்கிலும் அவர் அதிரடியாக விளையாடும் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் மீண்டும் முன்புபோல பந்து வீசுவது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்று இறுதியாக வெங்சர்க்கார் கூறி முடித்தார்