ஹர்திக் பாண்டியா கிடையாது… தற்போதைய இந்திய அணியில் இந்த மூன்று பேர் தான் மாஸ்; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்
2022 ஆம் ஆண்டு சர்வதேச இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்கள் குறித்து தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
2022 ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த இந்திய அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக், இருதரப் தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இவரால் நடந்து முடிந்த 2022 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
மேலும் 37 வயது கடந்துவிட்ட தினேஷ் கார்த்திக்கிர்க்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முடிவெடுத்த இந்திய அணி இவரை முற்றிலுமாக ஓரம் கட்டியுள்ளது.
இந்த நிலையில், கிரிக்கெட் குறித்தும் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் வெளிப்படையான தன்னுடைய கருத்துக்களை பேசி வரும் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக், 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்கள் குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட்.
2022 ஆம் ஆண்டு லிமிடெட் ஓவர் போட்டிகளில் மோசமான ஆட்டத்தை ரிஷப் பண்ட் வெளிப்படுத்தினாலும் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் 12 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று, 680 ரன்கள் அடித்துள்ளார்.அதில் இரண்டு சதங்களும் நான்கு அரை சதங்களும்அடங்கும்.
ஒரு நாள் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர்.
2022 ஆம் ஆண்டில் 15 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 724 ரன்கள் அடித்துள்ளார்.அதில் ஒரு சாதகங்களும் 6 அரைசதங்களும் அடங்கும்.
டி20 போட்டிகளில் மன்னனாக திகழும் சூரியகுமார் யாதவ்..
டி20 தொடரில் தலைசிறந்த நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் இந்திய அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டு 31 பங்கேற்று 1164 ரன்கள் அடித்துள்ளார் இதில் 2சாதகங்களும் 9அரை சதங்களும் அடங்கும்.