நாயகன் மீண்டும் வர்றார்... தரவரிசை பட்டியலில் அசுரவேகத்தில் முன்னேறிய தினேஷ் கார்த்திக்; புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 1

சர்வதேச டி.20 போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

மூன்று வருட போராட்டத்திற்கு பிறகு தென் ஆப்ரிக்கா தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக், தென் ஆப்ரிக்கா தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடிக்காமல் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை மிக சரியாக செய்து கொடுத்தார்.

நாயகன் மீண்டும் வர்றார்... தரவரிசை பட்டியலில் அசுரவேகத்தில் முன்னேறிய தினேஷ் கார்த்திக்; புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 2

தென் ஆப்ரிக்கா தொடரில் மிக சிறப்பாக விளையாடியதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச டி.20 போட்டிகளில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 108வது இடத்தில் இருந்து 21 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பிடித்துள்ளார்.

அதே போல் தென் ஆப்ரிக்கா தொடரில் மிக சிறப்பாக விளையாடி 206 ரன்கள் குவித்த இஷான் கிஷன், பேட்ஸ்மேன்களுக்கான தவரிசை பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். டி.20 போட்டிகளுக்கான தவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இருக்கும் ஒரே இந்திய வீரரும் இஷான் கிஷன் தான். பேட்ஸ்மேன்களுக்கான தவரிசையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாமே தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) இரண்டாவது இடத்திலும், மார்கரம் (தென் ஆப்ரிக்கா) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

நாயகன் மீண்டும் வர்றார்... தரவரிசை பட்டியலில் அசுரவேகத்தில் முன்னேறிய தினேஷ் கார்த்திக்; புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு !! 3

பந்துவீச்சில் பிரமாதமாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், 3 இடங்கள் முன்னேறி 23வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஹசில்வுட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து அணியின் அடில் ரசீத் இரண்டாவது இடத்திலும், தென் ஆப்ரிக்கா அணியின் தப்ரைஸ் சம்சி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி முதல் இடத்திலும், ஷாகிப் அல் ஹசன் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.