எல்லாரும் ஒருபக்கம் போனா.. தினேஷ் கார்த்திக் ஒருபக்கம் போறாரே! தினேஷ் கார்த்திக் கொடுத்த கமெண்ட்டால் ரசிகர்கள் கடுப்பு! 1
The Board of Control for Cricket in India (BCCI) recently show-caused Dinesh Karthik for entering the Trinbago Knight Riders (TKR) dressing room during a Caribbean Premier League (CPL) game

எல்லாரும் ஒருபக்கம் போனா.. தினேஷ் கார்த்திக் ஒருபக்கம் போறாரே! தினேஷ் கார்த்திக் கொடுத்த கமெண்ட்டால் ரசிகர்கள் கடுப்பு!

அனைவரும் எதிர்க்கும் ஐசிசியின் விதிக்கு ஆதரவு தருவது போல தினேஷ் கார்த்திக் பேசியதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவி வரும் காரணத்தால் இரண்டு மாதங்களுக்கும் மேலாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் காலவரையின்றி தள்ளிவைப்பு பட்டிருக்கின்றன. தற்போது சில நாடுகளில் வைரஸ் தாக்கம் குறைந்து வரும் காரணத்தினால் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லாரும் ஒருபக்கம் போனா.. தினேஷ் கார்த்திக் ஒருபக்கம் போறாரே! தினேஷ் கார்த்திக் கொடுத்த கமெண்ட்டால் ரசிகர்கள் கடுப்பு! 2

இந்தியாவை பொருத்தவரை, நாளுக்குநாள் வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் இந்திய வீரர்கள் பயிற்சிக்கு வருவதற்கு தயக்கம் காட்டி வரும் நிலையில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாது என பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதற்கிடையில், மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர்பில் தொடங்கினால் வீரர்களின் நலன் கருதி சில புதிய விதிமுறைகளை போட்டியில் அமல்படுத்த ஐசிசி திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க பவுலர்கள் எச்சிலை பயன்படுத்துவது உண்டு. ஆனால் இது மற்ற வீரர்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்பதால் அதனை ஐசிசி தடை செய்திருக்கிறது. அதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்தலாமா? என்று ஆலோசனையும் நடந்து வருகிறது.

எல்லாரும் ஒருபக்கம் போனா.. தினேஷ் கார்த்திக் ஒருபக்கம் போறாரே! தினேஷ் கார்த்திக் கொடுத்த கமெண்ட்டால் ரசிகர்கள் கடுப்பு! 3
ADELAIDE, AUSTRALIA – JANUARY 15: (L-R) Dinesh Karthik of India celebrates with MS Dhoni of India after deferating Australia during game two of the One Day International series between Australia and India at Adelaide Oval on January 15, 2019 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz/Getty Images)

இன்னிலையில் எச்சிலை பயன்படுத்தவில்லை என்றால் பந்தின் பதம் மாறி மொத்தமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிடும் என பலரும் இந்த விதிமுறையை மாற்றும்படி ஐசிசியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஏராளமான வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய வீரரும் சென்னையை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பேசியுள்ளார்.

எல்லாரும் ஒருபக்கம் போனா.. தினேஷ் கார்த்திக் ஒருபக்கம் போறாரே! தினேஷ் கார்த்திக் கொடுத்த கமெண்ட்டால் ரசிகர்கள் கடுப்பு! 4

அவர் கூறியதாவது: “பவுலர்களுக்கு எச்சிலை பயன்படுத்துவது தடை என்றால்  ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. ஆனால் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைய ஏனைய வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் 20 முதல் 30 ஓவர்கள் பந்தை சுவிங் செய்யவேண்டியிருக்கும். இந்த புதிய விதியால் அது முற்றிலும் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க மற்றும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ள அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.” என்றார் தினேஷ் கார்த்திக்.

ஐசிசி சாதகமாக பேசுவதுபோல தெரிந்ததால் ரசிகர்கள் அவர் மீது சற்று கடுப்பாகி உள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *