டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டனாக பொருப்பேற்கும் தினேஷ் கார்த்திக்! 1

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 8-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக் கேப்டனாக நீடிக்கிறார். அணி விவரம் வருமாறு:-

முரளிவிஜய், ஜெகதீசன், ஹரி நிஷாந்த், தினேஷ் கார்த்திக் (கேப்டன்), விஜய் சங்கர் (துணை கேப்டன்), பாபா அபராஜித், ஷாருக்கான், ஆர்.அஸ்வின், முருகன் அஸ்வின், சாய் கிஷோர், டி.நடராஜன், ஜி.பெரியசாமி, விக்னேஷ், முகமது, கவுசிக்.

மேலும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்ததும் தமிழக அணியுடன் இணைவார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய அபினவ் முகுந்துக்கு இடம் கிடைக்கவில்லை.

டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டனாக பொருப்பேற்கும் தினேஷ் கார்த்திக்! 2
Dinesh Karthik and Shahrukh Khan shone with the bat in Tamil Nadu’s opening match against Rajasthan. – PTIdinesh kar

முன்னதாக, விஜய் ஹசாரே தொடரின் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடக அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு, ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. இதில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியும், மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற கர்நாடக அணி கேப்டன் மணிஷ் பாண்டே பீல்டிங்கை தேர்வு செய்தார்.

டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டனாக பொருப்பேற்கும் தினேஷ் கார்த்திக்! 3

இதையடுத்து தமிழக அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அபினவ் முகுந்தும், முரளி விஜய்யும் களமிறங்கினர். 2 பந்துகளை மட்டுமே சந்தித்த முரளி விஜய், டக் அவுட் ஆகி சொதப்பினார். அடுத்து வந்த அஸ்வின் 8 ரன்களில் வெளியேற, அபராஜித் வந்தார். அவரும் முகுந்தும் நிதானமாகவும் அதே நேரம் சரியான பந்துகளை விளாசியும் ஆடினர்.

டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டனாக பொருப்பேற்கும் தினேஷ் கார்த்திக்! 4

இந்தத் தொடரில் சிறப்பாக ஆடி வந்த ஷாரூக் கான் 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைக்கவில்லை. கர்நாடக பந்துவீச்சாளர் அபிமன்யூ மிதுன், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். அவர், ஷாருக் கான், முகமது, முருகன் அஸ்வின் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார். இதனால், தமிழக அணி, 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கர்நாடக தரப்பில் மிதுன், 5 விக்கெட்டுகளையும் கவுசிக் 2 விக்கெட்டுகளையும் ஜெய்ன், குமாரப்பா கவுதம் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டனாக பொருப்பேற்கும் தினேஷ் கார்த்திக்! 5

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கர்நாடக அணியில் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் 11 ரன்களில் வாசிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மாயங்க் அகர்வால் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் 122 ரன்கள் சேர்த்தனர். கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் மழை குறிக்கிட்டது. அப்போது ராகுல் 52 ரன்களுடனும் அகர்வால் 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

டி20 தொடருக்கான அணி அறிவிப்பு: கேப்டனாக பொருப்பேற்கும் தினேஷ் கார்த்திக்! 6

எனினும் இதன்பின்னர் மழை நிற்காத காரணத்தால் ஆட்டத்தை ரத்து செய்வது என்று நடுவர்கள் முடிவு செய்தனர். எனவே விஜேடி முறையின் படி கர்நாடகா அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றிப் பெறும். கர்நாடகா அணி 146 ரன்கள் எடுத்திருந்த காரணத்தால் கர்நாடகா அணி, தமிழ்நாடு அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டி சென்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *